தலைப்புச் செய்தி

Sunday, March 13, 2011

ஹசன் அலிக்கு நிபந்தனையின் பேரில் பிணை!

ஹவாலா என்னும் பணப்பரிவர்த்தனை மூலமாக 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, குதிரை பண்ணை உரிமையாளர் ஹசன் அலிக்கு மும்பை நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கியது.


இந்தியாவிலிருந்து சட்ட விரோத பணப் பரிமாற்றத்தின் மூலம், பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் சுவிஸ் வங்கியில் இரகசிய கணக்கில் முதலீடு செய்திருப்பதாக, புனேயைச் சேர்ந்த குதிரை பண்ணை உரிமையாளர் ஹசன் அலியை அமலாக்க பிரிவினர் கைது செய்தனர்.

இவரை மும்பை முதன்மை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். காவலில் வைத்து விசாரிக்க அனுமதிகோரிய அமலாக்கப் பிரிவினர் குற்றச்சாட்டுகளுக்குரிய எவ்வித ஆதாரங்களையும் காட்டத் தவறிவிட்டனர். இதனால் காவல் விசாரணைக்கு நீதிபதி தகிலியானி அனுமதி மறுத்தார். ஹசன் அலிக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

"அடுத்த ஐந்து நாட்களுக்கு மும்பையை விட்டு வேறு எங்கும் செல்ல கூடாது. தினந்தோறும் அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும்" என ஹஸன் அலிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மும்பை முதன்மை நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அமலாக்க பிரிவினர் தெரிவித்து உள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஹசன் அலிக்கு நிபந்தனையின் பேரில் பிணை!"

Post a Comment