தலைப்புச் செய்தி

Sunday, March 13, 2011

எஸ்எஸ்எல்சி தேர்வு எழுத 50 கி.மீ. தூரம் பயணம் செய்யும் ஒரிசா மாணவர்கள்

ரூர்க்கேலா, மார்ச் 12: ஒரிசா மாநிலத்தில் பழங்குடியின பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் தங்களது பள்ளி இறுதித் தேர்வை எழுதுவதற்கு தினசரி 30 கி.மீ. தூரம் முதல் 50 கி.மீ. தூரம் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. கல்வித் துறை விதித்துள்ள நிபந்தனைக்கு மாறாக இவர்கள் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


இது தொடர்பாக மாணவர்களும், பெற்றோர்களும் தங்களது அதிருப்தியை மாநில அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் பயிலும் பள்ளியிலிருந்து 5 கி.மீ. தூரத்திற்குள் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று மாவட்ட கல்வித்துறை உத்தரவாதம் அளித்திருந்தது. இருப்பினும் கொய்டா கிராமத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்பட வில்லை. இப்பகுதியில் மிக அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். நக்ஸலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி இதுவாகும். இங்குள்ள பர்சுவா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் லக்னிபாடா தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும். இந்த மையம் இப்பகுதியிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதேபோல கொய்டா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தினசரி 50 கி.மீ. தூரம் பயணம் செய்து கோப்னா மையத்துக்கு தேர்வு எழுதச் செல்ல வேண்டியுள்ளது. பதமுன்டா, டென்ஸô, டெங்குவா, ஜல்டா பகுதியில் உள்ள மாணவர்கள் 7 கி.மீ. முதல் 16 கி.மீ. வரை பயணம் செய்கின்றனர். இட்மா பகுதியில் உள்ள மாணவர்கள் தினசரி 30 கி.மீ. தூரம் பயணம் செய்து தேர்வு எழுத வேண்டியுள்ளது.

இந்த பகுதிகளில் போதிய தகவல் தொடர்பு வசதி கிடையாது. மிகவும் பின்தங்கிய இப்பகுதிகளில் மாணவர்கள் சென்று வருவதற்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளும் இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 80 மையங்களில் மொத்தம் 20 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "எஸ்எஸ்எல்சி தேர்வு எழுத 50 கி.மீ. தூரம் பயணம் செய்யும் ஒரிசா மாணவர்கள்"

Post a Comment