தலைப்புச் செய்தி

Thursday, March 10, 2011

லிபியா தலைநகரை புரட்சிபடை நெருங்கியது: அதிபர் கடாபி வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாக தகவல்

லிபியா அதிபர் கடாபிக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்து உள்ளது.அரசுக்கு எதிராக போராடி வரும் புரட்சி படையினர் கடாபிக்கு 72 மணி நேரம் கெடு விதித்து இருந்தனர். இந்த கெடு நாளையுடன் முடிகிறது.

இதனால் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.தலைநகரம் திரிபோலிக்கு 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சாவியா நகரம் புரட்சி படையினர் கட்டுப் பாட்டில் இருந்தது. அங்கிருந்து திரிபோலி நகரை நோக்கி புரட்சி படையினர் முன்னேறி வருகின்றனர்.

அவர்கள் தலை நகரை நெருங்க விடாமல் தடுக்க ராணுவ விமானம், ஹெலிகாப்டர் மூலம் சரமாரி குண்டு வீசினார்கள். ஆனால் அதையும் மீறி புரட்சிபடை முன்னேறி வருகிறது. தற்போது புரட்சி படையிடம் விமான எதிர்ப்பு பீரங்கிகள், ராக்கெட் குண்டுகள் உள்ளன. அவற்றின் மூலம் அரசு படையினரை தாக்கி வருகின்றனர்.

இவை தவிர மற்ற பகுதிகளில் இருந்தும் தலைநகரை நோக்கி புரட்சி படைகள் நகர்ந்து வருகின்றன.இதற்கிடையே கடாபி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் பரவி உள்ளன. கடாபி வழக்கமாக பயன்படுத்தும் “பால்கான்-900” என்ற விமானம் எகிப்தில் இருந்து புறப்பட்டு கிரீஸ் வழியாக சென்றது.

இதை கிரீஸ் உறுதிபடுத்தி உள்ளது. இந்த விமானத்தில் கடாபி தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அந்த விமானம் எங்கு சென்றது? அதில் கடாபி சென்றாரா? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "லிபியா தலைநகரை புரட்சிபடை நெருங்கியது: அதிபர் கடாபி வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாக தகவல்"

Post a Comment