மைக்ரோ சாப்ட் கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் நீண்ட காலமாக உலகில் முதல் பணக்காரராக இருந்து வந்தார்.அவரை கடந்த ஆண்டு மெக்சிகோ நாட்டின் டெலிபோன் நிறுவன அதிபர் கார்லோஸ் பின்னுக்கு தள்ளினார். இந்த ஆண்டும் அவர் உலகின் முதல் இடத்தை பிடித்து உள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போபர்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர்(பில்லியனர்ஸ்) பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பணக்காரர் பட்டியலை இப்போது வெளியிட்டு உள்ளது. அதில் கார்லோஸ் சிலிப் முதல் இடத்தில் உள்ளார்.
அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி. கடந்த ஆண்டை விட இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 90 ஆயிரம் கோடி அதிகரித்து உள்ளது. பில்கேட்ஸ் ரூ. 2 லட்சத்து 55 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்தவாரன பப்பட் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தை பிடித்து உள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த லட்சுமி மித்தல் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் 6-வது இடத்தில் உள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி ரூ. 1 லட்சத்து 23 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் 9-வது இடத்தை பிடித்து உள்ளார். விப்ரோ கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் அசிம்பிரேம்ஜி ரூ. 72 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் 36-வது இடத்தில் உள்ளார்.
மற்றொரு இந்தியரான சஷிரவி ரூயா ரூ. 67 ஆயிரத்து 500 கோடி சொத்துக்களுடன் 42-வது இடத்தில் உள்ளார்.ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானியின் சொத்து மிகவும் குறைந்து 103-வது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ. 40 ஆயிரத்து 800 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
போபர்ஸ் பத்திரிகை மொத்தம் 1210 பேரை உலக பணக்காரராக (பில்லியன்ர்ஸ்) தேர்வு செய்துள்ளது. அதில் 413 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 115 பேர் சீனாவையும், 101 பேர் ரஷியாவையும் சேர்ந்தவர்கள். 55 பேர் இந்தியர்கள்.
முதல் முறையாக ஐரோப்பிய நாட்டினரை விட ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். ஆசியாவைச் சேர்ந்தவர்கள் 332 பேரும், ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் 300 பேரும் இடம் பிடித்து உள்ளனர்.

0 comments: on "மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் உலகில் முதல் பணக்காரர்: ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி சொத்து"
Post a Comment