ஈராக்கைப் போன்று லிபியாவையும் மேற்கத்திய நாடுகள் நடத்த முற்பட்டால் அல் காய்தாவுடன் இணைந்து அந்த நாடுகளுக்கு எதிராக புனிதப் போருக்கு பிரகடனம் செய்வேன் என லிபியத் தலைவர் கடாபி தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் மிலன் நகரிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தாங்கள் தற்போது அல் காய்தாவுக்கும் தீவிரவாதத்துக்கும் எதிராக போரிட்டுக் கொண்டிருப்பதாகவும் அரசுக்கெதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அல்காய்தாவின் கைப்பாவைகள் என அவர் பேட்டியின் ஆரம்பத்தில் கூறினார். உங்களையும் சதாம் உசேன் போன்று ஆட்சியிலிருந்து அகற்ற அமெரிக்கா போன்ற நாடுகள் முற்படுவதால் தாங்கள் பயப்படுகிறீர்களா என கடாபியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவ்வாறு நிகழுமானால் நான் அல்காய்தாவுடன் இணைந்து விடுவேன் என தெரிவித்தார்.
இத்தாலி பிரதமர் பெர்லுஸ்கோனி தன்னை ஏமாற்றி விட்டார் என்று கூறிய கடாபி தங்கள் நாட்டுக்கெதிராக வான்வெளித் தாக்குதல் நடத்தக் கோரிக்கை விடுத்த பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசுக்கெதிராக செயல்படுபவர்கள் தோற்று விட்டார்கள் என்றும் அவர்கள் சரண் அடைய வேண்டும் அல்லது நாட்டை விட்டு ஓட வேண்டும் என எச்சரித்துள்ளார்.
0 comments: on "அல்காய்தாவுடன் இணைந்து விடுவேன் - கடாபி அதிரடி"
Post a Comment