தலைப்புச் செய்தி

Wednesday, March 16, 2011

பஹ்ரைனில் அவசர நிலை பிரகடனம்

தொடர்ந்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த பஹ்ரைன் அரசு அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இந்த அவசர கால சட்டங்கள் 3 மாதங்களுக்கு அமுல்படுத்தப்படும் என பஹ்ரைன் அதிபர் ஹமாத் பின் ஈஸா அல் கலிபா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


நாட்டின் ராணுவ தலைமை அதிகாரிக்கு போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு உதவியாக முழு அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று (15.03.2011) ஆர்ப்பாட்டக்காரர்களின் துப்பாக்கி சூட்டுக்கு சவுதி அரேபியாவைச் சார்ந்த ராணுவவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வளைகுடா நாடுகளைச் சார்ந்த படைவீரர்கள் நாட்டினை மீண்டும் சுமுகமான நிலைக்கு கொண்டு வர நேற்று வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு வெளிநாட்டு படைவீரர்களை பஹ்ரைனுக்கு அனுப்பியதற்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை தடுக்கக் கூடாது என வெளியுறவு பேச்சாளர் ரமின் தெரிவித்தார்.

அரசுக்கெதிராக தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தற்போது இனரீதியான ஆர்ப்பாட்டமாக உருவெடுத்துள்ளது கவலையளிக்க கூடியதாக இருக்கிறது. கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானைச் சார்ந்த அப்துல் மாலிக் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் வங்காளதேசத்தைச் சார்ந்த மூன்று தொழிலாளிகளும் மனாமாவில் தாக்கப்பட்டுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பஹ்ரைனில் அவசர நிலை பிரகடனம்"

Post a Comment