தலைப்புச் செய்தி

Tuesday, March 15, 2011

ஆஸ்திரேலியா:இந்திய மாணவி வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை

கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் 24 வயது இந்திய மாணவி ஒருவர் வன்புணரப்பட்டு கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவரது உடல் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்டு சிட்னியில் ஒரு கால்வாய் அருகே வீசப்பட்டிருந்தது.


இறந்தவர் பெயர் தோஷா தாக்கர் என்று கண்டறியப்பட்டுள்ளது. மார்ச் 09ம் தேதி இந்த கொலை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியாடோபேங்க் பூங்கா அருகே கால்வாய் ஒன்றில் சூட்கேஸினுள் ஒரு பெண்ணின் உடல் இருந்ததை மார்ச் 11-ம் தேதி கட்டுமானத் தொழிலாளர்கள் பார்த்துள்ளனர். பின்னர் அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கர் சிட்னியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். ஆஸ்திரேலியாவில் அவர் நிரந்தரமாக குடியிருந்து வருகிறார். அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியவில்லை என தாக்கரின் குடும்பத்தினரும், நண்பர்களும் தெரிவித்தனர்.

இந்தக் கொலை தொடர்பாக 19 வயதான டேனியல் ஸ்டானி ரெஜினால்டு என்பவரை காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஆஸ்திரேலியா:இந்திய மாணவி வன்புணர்வுக்கு ஆளாகி படுகொலை"

Post a Comment