தலைப்புச் செய்தி

Wednesday, March 16, 2011

காங்கிரஸின் 63 தொகுதிகள் அறிவிப்பு

சென்னை, மார்ச் 15: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலுவும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டனர்.


3 அமைச்சர் தொகுதிகள்: திமுக கூட்டணியில் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளில் 3 அமைச்சர்களின் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி (சென்னை அண்ணா நகர்), தா.மோ. அன்பரசன் (ஆலந்தூர்), என். செல்வராஜ் (முசிறி) ஆகியோரின் தொகுதிகள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

2006-ல் திமுக வெற்றிபெற்ற அறந்தாங்கி (உதயம் சண்முகம்), ராதாபுரம் (அப்பாவு) தொகுதிகளும் காங்கிரஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மின்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான ஆர்க்காடு வீராசாமியின் தொகுதி காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பல்லாவரத்திலும், வனத்துறை அமைச்சர் என். செல்வராஜ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மணச்சநல்லூர் (திருச்சி) தொகுதியிலும் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதவிர கடந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட கலசப்பாக்கம் தொகுதி இப்போது காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால் இப்போது ராயபுரம், தியாகராய நகர், திரு.வி.க நகர், அண்ணாநகர், மயிலாப்பூர் ஆகிய 5 தொகுதிகள் கிடைத்துள்ளன.

மாவட்ட வாரியாக காங்கிரஸýக்கு

  • ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்

  • திருவள்ளூர் : திருத்தணி,

  • பூந்தமல்லி (தனி), ஆவடி.

  • சென்னை : திரு.வி.க. நகர் (தனி),

  • ராயபுரம், அண்ணா நகர்,

  • தியாகராய நகர்,

  • மயிலாப்பூர்.

  • காஞ்சிபுரம் : ஆலந்தூர்,

  • ஸ்ரீபெரும்புதூர் (தனி),

  • மதுராந்தகம் (தனி).

  • வேலூர் : சோளிங்கர், வேலூர்,

  • ஆம்பூர்.

  • கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, ஓசூர்.

  • திருவண்ணாமலை : செங்கம் (தனி),

  • கலசப்பாக்கம், செய்யாறு.

  • விழுப்புரம் : ரிஷிவந்தியம்.

  • சேலம் : ஆத்தூர் (தனி),

  • சேலம் வடக்கு.

  • நாமக்கல் : திருச்செங்கோடு.

  • ஈரோடு : ஈரோடு மேற்கு,

  • மொடக்குறிச்சி.

  • நீலகிரி : உதகமண்டலம்.

  • கோவை : வால்பாறை (தனி),

  • தொண்டாமுத்தூர்,

  • சிங்காநல்லூர்.

  • திருப்பூர் : திருப்பூர் தெற்கு,

  • காங்கேயம்,

  • அவினாசி (தனி).

  • திண்டுக்கல் : நிலக்கோட்டை (தனி),

  • வேடசந்தூர்.

  • கரூர் : கரூர்.

  • திருச்சி : மணப்பாறை, முசிறி.

  • அரியலூர் : அரியலூர்.

  • கடலூர் : விருத்தாசலம்.

  • நாகை : மயிலாடுதுறை.

  • திருவாரூர் : திருத்துறைப்பூண்டி (தனி).

  • தஞ்சாவூர் : பாபநாசம்,

  • பட்டுக்கோட்டை,

  • பேராவூரணி.

  • புதுக்கோட்டை : திருமயம், அறந்தாங்கி.

  • சிவகங்கை : காரைக்குடி, சிவகங்கை.

  • மதுரை : மதுரை வடக்கு,

  • மதுரை தெற்கு,

  • திருப்பரங்குன்றம்.

  • விருதுநகர் : விருதுநகர்.

  • ராமநாதபுரம் : பரமக்குடி (தனி),

  • ராமநாதபுரம்.

  • தூத்துக்குடி : விளாத்திக்குளம்,

  • ஸ்ரீவைகுண்டம்.

  • திருநெல்வேலி : வாசுதேவநல்லூர் (தனி),

  • கடையநல்லூர்,

  • நாங்குநேரி, ராதாபுரம்.

  • கன்னியாகுமரி : குளச்சல், விளவங்கோடு,

  • கிள்ளியூர்.

பாமக போட்டியிடும் தொகுதிகள்

திருப்போரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆர்க்காடு, போளூர், ஜோலார்பேட்டை, செஞ்சி, மயிலம், நெய்வேலி, மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, பவானி, தருமபுரி, பூம்புகார், திண்டுக்கல், ஆலங்குடி, மதுரவாயல், அணைக்கட்டு, ஜெயங்கொண்டம், பர்கூர், வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, புவனகிரி, கோவில்பட்டி, திண்டிவனம், சோழவந்தான், வேதாரண்யம், பரமத்திவேலூர், பாலக்கோடு.

விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்

விடுதலைச் சிறுத்தைகள் 10 தொகுதிகளில் 2 பொதுத் தொகுதிகளிலும் 8 தனித் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.

அந்தக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள் விவரம்:
  • பொதுத் தொகுதிகள்: சோளிங்கநல்லூர், உளுந்தூர்பேட்டை.
  • தனித் தொகுதிகள்: செய்யூர், அரக்கோணம் , கள்ளக்குறிச்சி,
  • திட்டக்குடி, காட்டுமன்னார்கோயில், சீர்காழி, அரூர், ஊத்தங்கரை.
தேர்தலுக்குப் பிறகு வசந்த காலம்: தங்கபாலு

சென்னை, மார்ச் 15: தேர்தலுக்குப் பிறகு தமிழக காங்கிரஸýக்கு வசந்த காலம் பிறக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:

கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற பெரும்பாலான தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளோம்.

2004 மக்களவைத் தேர்தலில் 10 தொகுதியில் போட்டியிட்ட எங்களுக்கு 2009-ல் 15 தொகுதிகள் கிடைத்தது. 2006 பேரவைத் தேர்தலில் 48-ல் போட்டியிட்ட எங்களுக்கு இப்போது 15 தொகுதிகள் அதிகமாக கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருந்ததால் தருமபுரி, தேனி மாவட்டங்களில் எங்களுக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை. வரும் உள்ளாட்சித் தேர்தல், மேலவைத் தேர்தல்களில் இந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மத்திய, மாநில அரசின் சாதனைகளைச் சொல்லி பிரசாரம் செய்வோம். அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றுவார்கள்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல செய்தி வரும், அதன் பிறகு வசந்த காலம் பிறக்கும் என்றார் தங்கபாலு.

மகிழ்ச்சியும், வருத்தமும்- இளங்கோவன்

சென்னை, மார்ச் 15: காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகள் குறித்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியது: காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்ட பெரும்பாலான தொகுதிகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும், பெரிதும் எதிர்பார்த்த கோபிசெட்டிப்பாளையம், திருச்சி, மாதவரம், பெரம்பூர் ஆகிய தொகுதிகள் கிடைக்காதது வருத்தமளிக்கிறது.

அந்த கோஷ்டி, இந்த கோஷ்டி என்று பார்க்காமல் வெற்றி வாய்ப்புள்ள சரியான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடமும், ஐவர் குழுவும் தேர்வு செய்தால் வெற்றி நிச்சயம். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அவர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "காங்கிரஸின் 63 தொகுதிகள் அறிவிப்பு"

Post a Comment