ஜப்பானில் சுனாமி தாக்குதலை தொடர்ந்து புகுஷிமா மாகாணத்தில் உள்ள டாய் இச்சி அணு மின் நிலையத்தில் மேலும் ஒரு அணு உலை வெடித்து சிதறியது. இன்று அதிகாலை 2 ஆம் எண்அணு உலை வெடித்து சிதறியதால் நைட்ரஜன் வாயு வெளியேறி வருவதால் பதற்றம் தொடர்கிறது.
ஏற்கனவே நேற்று அதிகாலை 3வது எண் அணு உலை வெடித்ததை தொடர்ந்து மேலும் இன்று மற்றுமொரு அணு உலை வெடித்ததால் அப்குதி முழுவதும் புகை மண்டலமாக பரவியதை தொடர்ந்து ஜப்பானிய மக்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர்.
புகுஷிமா மாகாணத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் 1வது மற்றும் 3வது அணு உலை வெடித்திருந்தது. முதல்முறையாக அணுமின் நிலையத்தில் உள்ள சில பணியாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அணுமின் நிலைய அதாரிட்டி கேட்டுகொண்டுள்ளது.
0 comments: on "ஜப்பானில் மீண்டும் ஒரு அணு உலை வெடித்து சிதறியது!"
Post a Comment