தலைப்புச் செய்தி

Tuesday, February 8, 2011

இது உண்மை...ஆனால் தூய்மையான‌ ச‌முதாய அக்க‌றையுடையோர், சிந்திக்க‌க் கூடியோருக்கு ம‌ட்டும் ..


அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும். அந்தக் கூட்டணி வெற்றிபெற்றால் செல்வி ஜெயலலிதாதான் முதல்வராக வரவேண்டும் என்று பிரபல பத்திரிகையாளர் சோ கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னராவது செல்வி ஜெயலலிதா ஆட்சி பீடம் ஏறவேண்டும் என்பதனை அவர் கடந்த பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருபவர். எனவே தப்பித் தவறி கேப்டன் விஜயகாந்த் முதல்வர் கோரிக்கையை முன்மொழிந்துவிடக்கூடாது என்பதில் அவர் எச்சரிக்கையாக இருக்கிறார். எனவே அ.தி.மு.கவிற்கு கேப்டன் நேசக்கரம் நீட்ட வேண்டும். அத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதனைத் தாண்டி அவர் துணை முதல்வர் பதவிக்குக் கூட தூண்டில் போடக்கூடாது என்பதனை சோ தெளிவுபடுத்தியிருக்கிறார்.

அவருடைய கோரிக்கையை நாம் அரசியல்ரீதியாகத்தான் பார்க்கிறோம். ஈழப்பிரச்சினை உட்பட எத்தனையோ பிரச்சனைகளில் ஜெயலலிதாவும் சோ அவர்களும் ஒருமித்தக் கருத்து கொண்டவர்கள். அ.தி.மு.கவைத் தோற்றுவித்த அமரர் எம்.ஜி.ஆரின் கொள்கை, கோட்பாடுகளுக்கு நேர் எதிராகத்தான் இன்றைக்கு அந்தக் கழகம் செயல்படுகிறது. தேர்தல் காலங்களில் மட்டும் அந்தக் கழகத் தலைமைக்கு எம்.ஜி.ஆரின் நினைப்பு வரும்.

பொதுவாக சோ அவர்கள் இந்துத்துவா சிந்தனையுள்ளவர். அடிப்படையில் அவர் பி.ஜே.பி. ஆதரவாளர்தான். அந்தச் சிந்தனையிலிருந்து செல்வி ஜெயலலிதா மாறுபட்டவர் அல்ல. பாபர் மசூதி இடிப்பை பகிரங்கமாக ஆதரித்தவர் செல்வி ஜெயலலிதா. நரேந்திர மோடியின் முடிசூட்டு விழாவிற்குத் தனி விமானத்தில் பறந்து சென்றவர். அதே மோடி, சென்னை வந்தபோது 24 வகை காய்கறிகளு டன் விருந்து வைத்து மகிழ்ந்தவர்.த‌மிழ‌க‌த்திலிருந்து க‌ர‌சேவைக்கு ஆள் அனுப்பிய‌ ஒரே க‌ட்சி ஜெய‌ல‌லிதா த‌லைமையிலான‌ அதிமுக‌. ராம‌னுக்கு அயோத்தியில் கோயில் க‌ட்டாம‌ல் இத்தாலியிலா க‌ட்டுவார்க‌ள் என்று டெல்லியில் முத‌ல‌ம‌ச்சர்க‌ள் மாநாட்டில் ப‌கிர‌ங்க‌மாக‌ யாருக்கும் ப‌ய‌ப்ப‌டாம‌ல் த‌ன் காவி விசுவாச‌த்தை வெளிக்காட்ய‌வ‌ர்.

எனவே மீண்டும் செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக வரவேண்டும் என்று சோ கொள்கைப் பிரகடனம் செய்ததில் வியப்பில்லை. அகில இந்திய அளவில் பி.ஜே.பி. ஆட்சி, தமிழகத்தில் செல்வி ஜெயலலிதா ஆட்சி என்பதனை சோ தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.

ஒரு செய்தியை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அமரர் எம்.ஜி.ஆரை மரியாதை நிமித்தம் சந்திக்க விரும்புவதாக பி.ஜே.பி. தலைவர்கள் தூது அனுப்பினர். அப்போது அந்தக் கட்சி யின் தலைவராக இருந்த ஜனா.கிருஷ்ணமூர்த்தி தவமாய் தவமிருந்தார்.

"மரியாதை நிமித்தமாக சந்திக்க விரும்புகின்றனர்? நீங்களும் அனுமதி கொடுத்தால் என்ன'' என்று நாம் (ந‌க்கீர‌ன் கோபால்) கூட எம்.ஜி.ஆரை வலியுறுத்தினோம். அதுவே அவருக்கு இதய வலியைக் கொடுத்துவிட்டது. ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க. என்பது பி.ஜே.பியின் ஒரு கிளைதான். அந்தக் கழகம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் இந்துத்துவா சக்திகள் ஆர்வம் கொள்ளத்தான் செய்யும். அதன் தலைமையே எவ்வளவு ஆசை கொண்டிருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம்.

முன்னர் செல்வி ஜெயலலிதா, முதல்வரான போது நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அதனை நாடே கண்டித்தது. அப்போது மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி. பிரதமராக வாஜ்பாய் வீற்றிருந்தார். தேசத்தின் மூத்த தலைவர் ஒருவர் நள் ளிரவில் ஒரு கைதியைப்போல் இழுத்துச் சென்றதை தொலைக்காட்சியில் கண்ணுற்ற அவர் மனம் கலங்கிப்போனார். தமிழக அ.தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.

அந்தச் சமயத்தில் வாஜ்பாயை நாக்பூரிலிருந்து ஒரு குரல் பகிரங்கமாக எச்சரித்தது. "ஜெயலலிதா அரசைத் தொடாதே' என்று அந்தக் குரல் எச்சரித்தது. அப்படி எச்சரித்தது வேறு யாருமல்ல. இந்துத்துவா சக்திகளின் தலைமைப் பீடமான ஆர்.எஸ்.எஸ்.தான். எனவே மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி வரவேண்டும் என்று இந்துத்துவா சக்திகள் விரும்புவதில் வியப்பில்லை. ஏனெனில் பி.ஜே.பி. அரசுகளுக்கு முன்மாதிரியாக வழிகாட்டி யாக, கட்டாய மதமாற்றச் சட்டம் கொண்டு வந்தவரே செல்வி ஜெயலலிதாதான். துணிச்சல் மிக்கவர்.

ச‌கோத‌ர‌ர்க‌ளே! ந‌ம்மில் எத்த‌னை பேர் காவிக்க‌றை ப‌டிந்த‌ ஜெய‌ல‌லிதாவிற்கு ந‌ம் ம‌ன‌சாட்சியை விற்றுவிட்டு ஓட்ட‌ளிக்க‌ போகிறோம் என்று பார்ப்போம். எங்கே உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை ப‌தியுங்க‌ள். எத்த‌னை உள்ள‌ங்க‌ள் ஜெய‌ல‌லிதாவிற்கு ஓட்ட‌ளிப்ப‌தை ஞாய‌ப்ப‌டுத்தி ச‌ப்பை கார‌ண‌ங்க‌ளை ந்ம்முன் வைப்ப‌ர் என்று பார்ப்போம். இன்று அடையாள‌ம் காண்போம். யார் உண்மையான‌ ச‌முதாய‌வாதி? யார் ச‌முதாய‌ அக்க‌றைய‌ற்ற‌ வெறும் க‌ட்சிக்கார‌ர்க‌ள் என்று!

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இது உண்மை...ஆனால் தூய்மையான‌ ச‌முதாய அக்க‌றையுடையோர், சிந்திக்க‌க் கூடியோருக்கு ம‌ட்டும் .."

Post a Comment