தலைப்புச் செய்தி

Tuesday, February 8, 2011

பிப்ரவரி 21-ல் தீர்ப்பு, கசாபுக்கு, இந்துத்துவவாவுக்கு?

மும்பை, பிப்.7: பாகிஸ்தான்  அஜ்மல் கசாபுக்கு மரண தண்டனை வழங்கப்படுமா என்பது இம்மாதம் 21-ம் தேதி தெரியும். மரண தண்டனையிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அஜ்மல் கசாப் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 21-ம் தேதி அறிவிப்பதாக மும்பை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது.


இது தொடர்பான வழக்கில் அஜ்மல் கசாபுக்கு மும்பை நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது. தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரி அஜ்மல் கசாப், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.வி. மோரே ஆகியோர் விசாரித்து, பிப்ரவரி 7-ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர். தீர்ப்பை தயாரிப்பது தொடர்பான பணிகள் அதிகமிருப்பதாலும், ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணி அதிகமிருப்பதாலும் தீர்ப்பை 21-ம் தேதி அளிப்பதாக திங்கள்கிழமை கூறினர்.

ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறிந்து பாரதிய ஜனதா கட்சி எழுப்பிய கண்டனங்களில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டும் இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பலவீனமான அரசு என்றும், சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியைக் கருத்தில்கொண்டு பயங்கரவாதிகளுக்கு சதிராக உறுதியாக நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு தயங்குகிறது என்றும் மத்திய அரசு மீது குற்ற்ச்சாட்டுகள் எழுந்தன. மீண்டும் மீண்டும் ஒரே புகாரைச் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் அதை உண்மையென நம்பிவிடுவார்கள் என்று பீ.ஜெ.பி கருதுகிறது போலிருக்கிறது. போடா சட்டம் அமலில் இருந்த போதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன என்பதை இந்திய மக்கள் மறந்து பொயிருப்பார்கள் என்று அந்தக் கட்சித் தலைமை நினைக்கக்கூடும். கர்நாடக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பீ.ஜெ.பி. பெற்றிருக்கும் நிலையைப் பார்க்கும்போது அந்தக் குற்றச்சாட்டும்கூட கர்நாடக மக்கள் மத்தியல் எதிரொலித்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்தியவில் நடக்கும் பயங்கரவாத செயல்களில் அப்பாவி மக்கள் குறி வைக்கப்படுகிறார்கள் நம்முடைய மக்கள் கோயில்களிலும் மசூதிகளிலும் இறக்கிறார்கள். பேருந்துகளிலும் தொடர்வண்டிகளிலும் பயணம் செய்து கொண்டிலுக்கும்போதே மடிகிறார்கள். கடைவீதிகளிலும் பொழுதுபோக்குப் பூங்காகளிலும் சிதறி சின்னா பின்னமாகிறார்கள். எதற்கா சாகிறோம் என்று அறியக்கூட அவகாசம் இல்லாமல் அப்பாவிகளுடைய உயிர் பறிக்கப்பட்டு விடுகிறது. இவர்களில் பலர் அவர்களுடைய குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருக்கலாம். இவர்களுடைய மறைவுக்குப் பிறகு அந்தக் குடும்பங்கள் பலவிதமான துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகலாம். ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் சிலர் இந்தத் துயரங்களில் அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்கள்.

ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கம் ஏதாவது ஓர் அமைப்புகாரணம் என்ற முடிவுக்கு வருகிறோம். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று யாராவது சிலர் கைது செய்யப்படுகிறார்கள். குஜாத்தில் மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திரமோடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் பெருமையுடன் விவரிக்கும் காட்சிகளை காணும் யாருமே அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது. மதத்தின் பெயரால் மக்களை கொண்டுகுவித்த இவர்களை என்ன செய்வது.

இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு எப்போது தீர்ப்பு? இவர்களுக்கு யார்தான் தண்டனை கொடுப்பார்கள்? மக்களே சிந்தியுங்கள்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பிப்ரவரி 21-ல் தீர்ப்பு, கசாபுக்கு, இந்துத்துவவாவுக்கு?"

Post a Comment