தலைப்புச் செய்தி

Tuesday, February 8, 2011

புதிய சர்ச்சை! மாயாவதி ஷூவை துடைத்த பாதுகாப்பு அதிகாரி

உத்தரபிரதேச முதல்- மந்திரி மாயாவதியின் பாதுகாப்பு அதிகாரியாக இருப்பவர் பதாம்சிங். மாயாவதி உத்தரபிரதேசம் மாநிலம் ஆரியா நகரில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் சென்றார்.


ஹெலிகாப்டரில் இருந்து மாயாவதி இறங்கி நின்று அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாயாவதி ஷூவில் அழுக்கு படிந்திருந்தது.

இதை கவனித்த பாதுகாப்பு அதிகாரி பதாம்சிங் தனது கைக்குட்டையை எடுத்து மாயாவதியின் இரு ஷூக்களையும் துடைத்தார்.

2 பக்கமும் மாறிமாறி வந்து அவர் துடைத்து கொண்டிருந்தாலும் மாயாவதி அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அதிகாரிகளிடம் மும்முரமாக பேசிக் கொண்டிருந்தார். பதாம்சிங் மாநில உயர் போலீஸ் அதிகாரி ஆவார்.

அவரது பதவி காலம் சமீபத்தில் முடிந்து இருந்தது. ஆனாலும் அவருக்கு மாயாவதி பணி நீடிப்பு கொடுத்து பாதுகாப்பு அதிகாரியாக நீடிக்க செய்திருந்தார்.

இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மாயாவதி அதிகாரிகளை அடிமைகள் போல நடத்துகிறார். அதற்கு இந்த சம்பவமே சான்று என்று அவர் கூறினார்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "புதிய சர்ச்சை! மாயாவதி ஷூவை துடைத்த பாதுகாப்பு அதிகாரி"

Post a Comment