தலைப்புச் செய்தி

Thursday, November 18, 2010

சிங்களவராக இருந்து முஸ்லிமாக மாறிய பெண் எழுத்தாளர் எட்டு மாதமாக மறியலில்!

சிங்கள பௌத்தராக இருந்து இஸ்லாமியராக மாறி இருக்கும் சர்ச்சைக்கு உரிய எழுத்தாளர் சரா மாலினி பெரேரா துரதிஷ்டமாக இம்முறையும் பெருநாளை சிறையில் கழிக்க வேண்டியவர் ஆகி விட்டார்.


இவர் பஹ்ரெய்னில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பௌத்தராக இருந்து இஸ்லாமியராக மாறியமை எப்படி? என்பதை From Darkness to Light என்கிற நூலில் விபரமாக எழுதி இருந்தார்.

சுமார் எட்டு மாதங்களுக்கு முன் இலங்கை வந்திருந்தபோது நாட்டுக்கும், அரசுக்கும் எதிராக செயற்பட்டார், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறையில் கழித்த இரண்டாவது பெரு நாள் இதுவாகும். இவருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது. எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படுகின்றது.

நேற்றைய பெருநாளின்போது இவரின் பிரிவை கடுமையாக உணர்ந்த குடும்பத்தினர் இவரின் விடுதலைக்காக இறைவனிடம் மன்றாடுகின்றனர்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சிங்களவராக இருந்து முஸ்லிமாக மாறிய பெண் எழுத்தாளர் எட்டு மாதமாக மறியலில்!"

Post a Comment