தலைப்புச் செய்தி

Thursday, November 18, 2010

குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்த அனைத்து முஸ்லிம்களையும் விடுதலைச்செய்ய வேண்டும் - எஸ்.டி.பி.ஐ

புதுடெல்லி,நவ.18:இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா அமைப்புகள்தான் செயல்பட்டுள்ளன என புலானய்வு அதிகாரிகள் கண்டறிந்ததுடன் சில வழக்குகளில் குற்றப்பத்திரிகையும் சமர்ப்பித்த சூழலில் அவற்றின் பெயரால் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான அனைத்து முஸ்லிம் இளைஞர்களையும் விடுதலைச் செய்யவேண்டுமென சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

காவி பயங்கரவாதத்தை எதிர்க்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளார்ந்த நேர்மை இருக்குமானால், வெறும் சந்தேகத்தின் பெயரில் வருடக்கணக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளை விடுவிக்க அவர்கள் முன்வரவேண்டும் என கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மலேகான், அஜ்மீர், மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டது காவி பயங்கரவாதத்தின் அதிகாரப்பூர்வ ஏஜண்டுகள் என்பது புலனாய்வு ஏஜன்சிகள் கண்டறிந்துள்ளன. அதனால்தான், இந்த குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிலைநிற்காது.

சோனியா காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் கு.சி.சுதர்சன் வெளியிட்ட அவதூறு அறிக்கைக்கு பதிலடிக் கொடுக்கவே ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாதத் தொடர்பை காங்கிரஸ் கட்சி விவகாரமாக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்ஸோடு இத்தகையதொரு மிருதுவான போக்கை கடைப்பிடிப்பதால்தான் வருடக்கணக்காக சிறையில் துயரத்தை அனுபவிக்கும் முஸ்லிம் இளைஞர்களைக் குறித்து அவர்கள் மறந்து போனார்கள்.

செய்யாத குற்றத்திற்காக வருடக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் வாழ்க்கை பூரணமாக நசிந்து போகாமலிருக்க அவர்களின் விடுதலைக்காக தலைவர்கள் அரசுகளுக்கு நிர்பந்தம் கொடுக்கவேண்டும்.

முஸ்லிம்களை எளிதாக குற்றவாளிகளாக சித்தரித்து விடலாம் என்ற தேசிய அளவில் நிலவும் எண்ணம் திருத்தப்பட வேண்டும். இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் கைதுச் செய்யப்பட்ட ஹிந்துக்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திக் விஜய்சிங்கின் அறிக்கையில் உள்ளார்ந்த நேர்மை இருக்குமெனில் அவர் சிறையில் அநியாயமாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்.

பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்டதின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸும் பா.ஜ.கவும் செயல்பட்டுள்ளது எனக்கூறும் காங்கிரஸ், ஆனால் குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை தயாராகவில்லை. இவ்வாறு எ.சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதுச் செய்த அனைத்து முஸ்லிம்களையும் விடுதலைச்செய்ய வேண்டும் - எஸ்.டி.பி.ஐ"

Post a Comment