தலைப்புச் செய்தி

Saturday, November 27, 2010

அதிக சக்தி வாய்ந்த வைரஸ்கள் மூலம் பிரிட்டன் அணுசக்தி நிலையங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி

ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலுமாக தகர்க்க பயன்படுத்தப்பட்ட சூப்பர் வைரஸ் தற்போது கள்ளச் சந்தையின் மூலமாக தீவிரவாதிகளுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டக்ஸ்நெட் எனப்படும் இந்த வைரஸ் கணினிகளை முற்றிலுமாக அழித்து விடும் ஆற்றல் கொண்டது.

இதை பயன்படுத்தி அணுசக்தி நிலையங்கள் , உணவு வழங்கும் கட்டமைப்புக்கள், மருத்துவமனைகள், போக்குவரத்து மின்விளக்குகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் உள்ள கணினிகளை முற்றிலும் செயலிக்கச் செய்து விட்டு பின்னர் அவற்றை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிடுகின்றனரோ என்ற ஐயம் புலனாய்வுத் துறையினரிடம் காணப்படுகிறது.

தவறான நோக்கமும் , பண பலமும் , மதிநுட்பமும் கொண்ட தீவிரவாதிகளின் கையில் இந்த வைரஸ் தற்போது கிடைத்துள்ளது மிகவும் வருந்தத்தக்க ஒரு விடயம் எனவும் இதை பயன்படுத்தி தற்போதைய போலீஸ் தொடர்பு எண்ணான 999 , மருத்துவமனைகள் ஆகியவற்றை உடனடியாக செயலிழக்கச் செய்து விட முடியும்.

எந்த நேரமும் தீவிரவாதிகள் இதனை அழிவிற்கான ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என தகவல் தொழில்நுட்ப பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த முக்கியப்புள்ளி ஒருவர் தெரிவித்துள்ளார்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அதிக சக்தி வாய்ந்த வைரஸ்கள் மூலம் பிரிட்டன் அணுசக்தி நிலையங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதி"

Post a Comment