15 வயதாகும் சிறுமி ஒருவர் பிர்மிங்ஹாமில் உள்ள பாடசாலை வளாகத்தினுள் இஸ்லாமிய புனித நூலான குரானை எரிப்பது போன்ற காட்சிகள் சில தினங்களுக்கு முன்னர் அதே பாடசாலையில் பயிலும் வேறு சில மாணவர்கள் மூலம் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் அம்பலப்படுத்தப்பட்டது.
இதை பேஸ்புக்கில் பார்த்த 14 வயது சிறுவன் ஒருவன் மத உணர்வுகளை சிறுமி புண்படுத்தியுள்ளதாக சமூக வலையில் நேரடியாக சிறுமியுடன் மோதியதோடு அவரை அச்சுறுத்தியும் வந்துள்ளான். இந்த விடயம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளான காணொளியை பேஸ்புக் நீக்கி விட்டது. ஆனால் தொடர்ந்தும் இரு சிறுவர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எந்த காணொளியையும் இணையத்தில் போடுவதற்கு முன் உஷாராக இருக்க வேண்டும் என சிறுவர் நல அமைப்புக்கள் கேட்டுக் கொண்டுள்ளன. சிறுமியின் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் மத உணர்வுகளை புண்படுத்திய சிறுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புக்கள் சில வலியுறுத்தி வருவதால் சந்தேகத்தின் பேரில் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.





0 comments: on "குரானை எரித்த பிரிட்டன் சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது"
Post a Comment