தலைப்புச் செய்தி

Saturday, November 27, 2010

மார்பகம் பெரிதாக இருந்ததால் தன்னை சோதனையிட்டதாக பெண் புகார் - தொடர்ந்து அம்பலமாகி வரும் அமெரிக்க விமான நிலைய கெடுபிடி சோதனைகள்

சமீப காலமாகவே தீவிர பாதுகாப்பு சோதனைகள் என்ற பெயரில் அமெரிக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு விருப்பமில்லாத வகையில் பல சோதனைகள் நடத்தப்படுவதும் அது குறித்து அதிகப்படியான புகார்கள் பதிவாகி வருவதும் வாடிக்கையாகி விட்டது.

முழு உடல் ஸ்கேன், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து பகுதிகளையும் அதிகாரிகள் சோதனையிடுவது உள்ளிட்ட பல கெடுபிடிகள் பயணிகளுக்கு பெரிதும் எரிச்சலூட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

ஒர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்ட எலினா சுதர்லேன்ட் என்ற பெண் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் தன்னிடம் மிகவும் இழிவாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மார்பகங்கள் பெரியதாக இருந்ததால் அதிகாரிகள் தன்னை தனியே அழைத்துச் சென்று பல முறை மேலும் கீழும் மோசமாகப் பார்த்ததுடன் கைகளை வைத்தும் சோதனையிட்டதாக அந்த பெண் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எலினா மட்டுமல்ல தொடர்ந்து இது போன்ற பல புகார்களும் , குற்றச்சாட்டுக்களும் அமெரிக்க விமான நிலையங்களில் உள்ள பாதுகாப்பு சோதனை அதிகாரிகள் மீது பதிவு செய்யப்படுவது அமெரிக்காவின் போக்குவரத்து துறை நிர்வாகம் சரியாக செயல்படுகிறதா என்பது உள்ளிட்ட பல கேள்விகளை மக்களிடத்தில் விதைத்துள்ளது. அதிகாரிகளின் இது போன்ற சோதனைகளுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும் இவை நின்ற பாடில்லை.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மார்பகம் பெரிதாக இருந்ததால் தன்னை சோதனையிட்டதாக பெண் புகார் - தொடர்ந்து அம்பலமாகி வரும் அமெரிக்க விமான நிலைய கெடுபிடி சோதனைகள்"

Post a Comment