மியான்மரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சாங் சூகி படத்தை அட்டையில் போட்டதால், ஒன்பது பத்திரிகைகளுக்கு, பதிப்பு விதிகளை மீறியதாக, அந்நாட்டு ராணுவ அரசு தடை விதித்துள்ளது.
மியான்மரின் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் சூகி. சமீபத்தில் விடுதலையானதையொட்டி, அந்நாட்டு பத்திரிகைகள் சில அவரது படத்தை தங்களது முகப்பு அட்டையில் போட்டு வெளியிட்டிருந்தன.இந்நிலையில், அந்த பத்திரிகைகள் அனைத்தும், நாட்டின் பதிப்பு விதிமுறைகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ராணுவ அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.
விதிமுறை மீறல்கள் குறித்து எவ்வித விவரங்களும் வெளியிடப்படவில்லை. இந்த அளவு முக்கியத்துவம் வருவதை ராணுவ அரசு விரும்பவில்லை என்று மட்டும் தெரிகிறது.




0 comments: on "சூகி அட்டை படம் வந்ததால் 9 பத்திரிகைகளுக்கு தடை: மியான்மர் அரசு அதிரடி!"
Post a Comment