கோவையில் பள்ளி குழந்தைகள் முஸ்கான், ரித்திக் ஆகியோர் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். முஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
இதன் எதிரொலியாக, பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்கும் வகையில் அனைத்து தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாநில தொடக்கக்கல்வி இயக்குனர் மணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளி வேலை நேரத்தில் எக்காரணத்தை கொண்டும் பள்ளி வளாகத்தில் அன்னியர்களை அனுமதிக்கக்கூடாது. பள்ளி வேலை நேரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் பெண் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பி வைக்க நேரிட்டால் பெற்றோர்களை தவிர யாருடனும் அனுப்பக்கூடாது.
பள்ளிக்கு வரும் போதோ அல்லது செல்லும் போதோ பள்ளி குழந்தைகளுக்கு சமூக விரோதிகளால் ஆபத்து நேரிடும் என்று தெரிந்தால் உடனடியாக அருகாமையில் உள்ள காவல்துறையினருக்கு தலைமையாசிரியர் தகவல் அளிக்க வேண்டும்.அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலைய தொலை பேசி எண்ணையும், பள்ளி எல்லையில் உள்ள காவல்நிலையத் தொலைபேசி எண்ணையும் வைத்திருக்கும் படி அறிவு றுத்த வேண்டும். ஆபத்து என்றால் எப்படி காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கி யிருக்க வேண்டும்.
வாகனங்களில் பள்ளி குழந்தைகளை இறக்கி, ஏற்றி செல்லும் போது போக்கு வரத்து நெரிசல் இல்லாத இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் வாகனத்தை நிறுத்தும் படி வாகன ஓட்டிகளுக்கு தலைமையாசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால் மருத்துவமனை தொலைபேசி எண்ணை பயன்படுத்தி எப்படி உதவியை பெறுவது என்பது குறித்தும், குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்; இதுகுறித்து பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்க வேண்டும்.





0 comments: on "பள்ளி நேரத்தில் பெண் குழந்தைகளை பெற்றோர் தவிர வேறு யாருடனும் அனுப்பக்கூடாது:அரசு!"
Post a Comment