தலைப்புச் செய்தி

Wednesday, November 24, 2010

மக்கள் தொகை குறைவதால் ஈரான் அதிரடி நடவடிக்கை:-அதிபர் முகமது அகமதி நிஜாத்.

"ஈரானில் பெண்கள் 16 வயதிலும், ஆண்கள் 20 வயதிலும் திருமணம் முடித்து கொள்ள வேண்டும்' என, அந்நாட்டு அதிபர் முகமது அகமதி நிஜாத் வலியுறுத்தியுள்ளார். கடந்த 1979ல், ஈரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்ட பின் மக்கள் தொகை அதிகரித்தது. அதையடுத்து அங்கு குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990ல் இருந்து அங்கு மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது.
ஈரான் அதிபர் அகமதி நிஜாத், "குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் என்பது பாவமான செயல். மேற்கில் இருந்து இறக்குமதியான திட்டம்' என்று விமர்சித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர், "நம் நாட்டில் பெண்கள் 16 அல்லது 17 வயதிலும், ஆண்கள் 20 வயதிலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். தற்போது ஆண்கள் 26 வயதிலும், பெண்கள் 24 வயதிலும் மணம் செய்து கொள்கின்றனர். இவ்வளவு தாமதமாக மணம் செய்து கொள்வதற்கு காரணம் எதுவுமில்லை' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2005ல் அதிபராக பதவியேற்ற பின், நாட்டின் மக்கள் தொகையை பெருக்குவதில் அவர் ஈடுபட்டுள்ளார். தற்போது ஈரானில் 15ல் இருந்து 30 வயதிற்குள் ஏழுரை கோடி பேர் மட்டுமே உள்ளனர். உலகின் மூன்றாவது இளமை நாடு ஈரான் தான்.இந்தாண்டு ஜூலையில், புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மக்கள் தொகை குறைவதால் ஈரான் அதிரடி நடவடிக்கை:-அதிபர் முகமது அகமதி நிஜாத்."

Post a Comment