முஸ்லிம்கள் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதிப்பதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்று ராமஜென்ம பூமி - பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பினை ஒட்டி ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் (RSS) - ன் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
ராமர் தேசத்தின் அடையாளம், சமூகத்தில் பல சந்தேகங்கள் நிலவிவரும் வேலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். முஸ்லிம்கள் மட்டும் ராமர் கோயில் கட்ட ஆதரவளித்துவிட்டால் பின்பு யாரும் அவர்களை நோக்கி தேச துரோகிகள் என்று கூற முடியாது என்றும் அவர் கூறினார். இதுவே நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருக்கும், இங்கு எனது கருத்து என்ன என்பது கேள்வி இல்லை, நாங்கள் அமைதியையே விரும்புகின்றோம்.
சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி - பாபரி மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு நீதிமன்றம் வரும் செப்டம்பர் 24 தேதி 3 .30 மணியளவில் தீர்ப்பு வழங்க உள்ளது. லக்னோ அமர்வு நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பானது பாபர் மசூதி இருந்த 2 .77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலப்பரப்பு யாருக்கு சொந்தம் என்று முடிவு செய்யும். கடந்த திங்களன்று இரு வேறு மனுதாரர்கள் லக்னோ உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன் சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கின் தீர்ப்பை தள்ளி வைக்குமாறு மனு தாக்கல் செய்தனர். அதில் ஒரு மனுதாரர் அயோத்தி பிரச்னை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
லக்னோவை சார்ந்த பல்வேறு நம்பிக்கையுடைய ஆறு பேர் கொண்ட மற்றொரு குழு தாக்கல் செய்திருந்த மனு பொதுநலன் கருதி தாக்கல் செய்யப்பட்டது, இந்த மனுவில் வழக்கின் தீர்ப்பின் விழைவாக கலவரம் ஏற்பட்டு நாட்டின் அமைதி பாதிக்கப்படுவதோடு நாட்டின் நற்பெயருக்கும் கழங்கம் விழைவிக்கும் என்றும் குறிப்பிடிருந்தனர். மேலும் வழக்கின் நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி DB ஷர்மா ஓய்வு பெறுவது (செப்டம்பர் மாத இறுதியில் ஓய்வுபெருகின்றார்) என்பது தீர்பை விரைவு படுத்த ஓர் காரணமாக இருக்கக்கூடாது.
உத்தர பிரதேச மாநிலம் வெகுநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்ப்பினை எதிர்நோக்கி தயாராகி வருகின்றது, இன்னும் மத்திய அரசால் அனுப்பப்பட்ட 35000 துணை ராணுவப்படையினர் தீர்ப்பினை ஒட்டி மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடாமல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்
0 comments: on "அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதே பிரச்சனைக்கு தீர்வாகும் RSS!"
Post a Comment