உதைப்பூர்: சொஹ்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய சாட்சியான அசாம் கான் என்பவர் உதைபூரில் வைத்து சுடப்பட்டுள்ளார், தற்போதுவரை அவருடைய உடல்நிலை பற்றி எவ்வித தகவலும் இல்லை.
அசாம் கான் முன்னதாக NDTV செய்தியாளர்களிடம் இந்த போலி என்கவுண்டரில் பிஜேபி ராஜஸ்தானின் முக்கியதலைவர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் கூட்டாக சொஹ்ராபுதீனை கொல்வதற்காக 10 கோடி ரூபாயை மார்பில் தொழிலில் உள்ள மாபியா கும்பலிடம் கொடுத்ததாக கூறியிருந்தார்.
இந்த போலி என்கவுண்டரில் சொஹ்ராபுதீனை சுட்டுக் கொல்லுமாறு குஜராத் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதற்காக CBI யினால் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட முன்னால் குஜராத் இணை அமைச்சர் அமித் ஷாவிற்கும், கொலைகார மார்பல் கும்பலுக்கும் இடையே முக்கிய பாலமாக செயல்பட்டதாக ராஜஸ்தான் பிஜேபி யின் முக்கிய தலைவர்களான ஓம் மத்தூர் மற்றும் குலாப் சந்து கட்டாரியா ஆகியோரை CBI சந்தேகிக்கின்றது,
சொஹ்ராபுதீனின் நெருங்கிய உதவியாளரும் இந்த வழக்கின் முக்கிய சாட்சியுமான அசாம் கான் கடந்த பெப்ரவரி மாதம் CBI இடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார், அதுபற்றிய தகவல்களும் NDTV இடம் உள்ளது.
அவர் அந்த வாக்கு மூலத்தில் இந்த சொஹ்ராபுதீனுகெதிரான சதித்திட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்ட அதிகாரி அபாய்சுதசாமவிற்கு முக்கியப்பங்கு உள்ளதென கூறியிருந்தார், மூத்த IPS அதிகாரியான அபாய் சுதசாமா முன்னாள் குஜராத் உள்துறை இணை அமைச்சர் அமித் ஷாவிற்கு மிகவும் நெருங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments: on "சொஹ்ராபுதீன் வழக்கு : முக்கிய சாட்சி அசாம்கான் சுட்டுக்கொலை"
Post a Comment