தலைப்புச் செய்தி

Tuesday, September 21, 2010

முத்துபேட்டை MP அப்துல்ரகுமான் வீடு மீது தாக்குதல்

முத்துப்பேட்டையில் 18/09/2010 அன்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியில் பட்டுக்கோட்டை ரோட்டில் உள்ள (ஓடக்கரை) வேலூர் தொகுதி எம். பி அப்துல் ரஹ்மான் வீட்டை கல் வீசி தாக்கியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிகவும் பதற்றத்துடனேயே நடத்துவது வழக்கமாகிவிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக முஸ்லீம்கள் குடியிருப்பு பகுதிக்குள் விநாயகர் ஊர்வலம் செல்லக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கினார்கள். அப்படியிருந்தும் பல பள்ளி வாசல்களைக்கடந்தே விநாயகர் ஊர்வலம் செல்கிறது.

கடந்த ஆண்டு முதல் மாற்றுப்பாதையில் விநாயகர் ஊர்வலம் நடத்த பட்டிருகிறது. இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்தின் போது கலவரம் வந்துவிடக்கூடாது என்பதற்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் மூன்று மணிக்கு ஜாம்பவான் ஓடை கிராமத்தில் உள்ள சிவன் கோயில்களில் இருந்து புறப்பட்டு, சுமார் ஐந்து கிலோமிட்டார் வரை ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தின் இறுதியில் கிழக்குக்கடற்கரை சாலியில் உள்ள பாமணி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. விநாயகர் ஊர்வலம் இஸ்லாமியர் பகுதிக்குள் வந்துகொடிருந்த போது, வேலூர் எம்.பி. அப்துல்ரகுமான் வீட்டில் கல் எரிந்த ஒரு இளைஞரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் வேனுக்குள் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏற்படவிருந்த அசம்பாவிதம் தடுக்கப்பட்டதோடு, ஊர்வலமும் அமைதியாக நடந்து முடிந்தது.

காவல்துறையினரின் துரிதமான சமயோஜித நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே பெருத்த பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "முத்துபேட்டை MP அப்துல்ரகுமான் வீடு மீது தாக்குதல்"

Post a Comment