உத்திரப்பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் வரும் 24.09.2010 அன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும், யாரும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல், அமைதி காக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தீர்ப்பு வெளியாவதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது, நீண்டகால சட்டரீதியான போராட்டத்திற்குப் பிறகு வழங்கப்படும் தீர்ப்பை தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலுடன் உள்ளனர். ஆனால், இந்நேரத்தில் உணர்ச்சிவசப்படுவதால் யாருக்கும் எந்த நன்மையும் ஏற்படாது. நாட்டின் சமூக ஒற்றுமையை சீர்குலைக்க தேசவிரோதிகள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து உள்ளனர். அவர்கள் வெற்றி பெற நாம் வாய்ப்பு அளிக்கக் கூடாது என்று மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.அமைதி தொடர்வதால் தான் குஜராத் விரைவான முன்னேற்றம் அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: on "அயோத்தி தீர்ப்புக்கு குஜராத் மக்கள் அமைதிகாக்க வேண்டும்"
Post a Comment