காஷ்மீரில் இளம்பெண்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சியில் காஷ்மீர் இளம் பெண்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
அடிக்கடி தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகும் ஜம்மு காஷ்மீரில் பெண்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்ளும் வகையில், ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை சார்பில் ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. துப்பாக்கிகளை சரியாகப் பிடிப்பது, குண்டுகளை நிரப்புவது, சுடுவதற்கு குறி பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தீவிரவாதிகள் எங்களுக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கு தொல்லை கொடுக்கும் பட்சத்தில் அதை எங்களால் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. மோசமான சம்பவங்களில் இருந்து காத்துக் கொள்வதற்காக நாங்கள் பயிற்சி பெறுவது எனது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்று பயிற்சியில் ஈடுபட்ட பெண்கள் கூறினர்.
0 comments: on "இளம்பெண்களுக்கு ராணுவத்தினர் ஆயுதப்பயிற்சி!"
Post a Comment