திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வரும் 18ம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறவுள்ளது. இங்கு விநாயகர் ஊர்வலம் என்றாலே, பதட்டம் நிறைந்தே காணப்படும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் நடந்துகொண்டிருக்கிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருப்பார்கள்.
ஊர்வலப்பாதையில் கடந்த ஆண்டு முதல் மாறுதல் ஏற்பட்டிருப்பதால் அதே வழியில் இந்த ஆண்டும் செல்ல வேண்டும் என்று காவல்துறை கூறிவருகிறது.ஆனால் இந்த ஊர்வலக்காரர்கள் பழைய பாதையிலேயே செல்வோம் என்று கூறிவருகின்றனர். இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவிவருகிறது.
இரு தரப்பினரையும் சமாதானம் செய்துவைப்பதற்காக சமாதானக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகரன், தலைமையில் , மாவட்ட எஸ்.பி.மூர்த்தி ஆகியோர் கூட்டத்தை நடத்தினார்கள்.கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த பத்திரிக்கைகாரர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
கூட்டத்தில் கடந்த ஆண்டு சென்ற வழியிலேயே செல்லவேண்டும் என்று இந்து தரப்பினர் மற்றும் இஸ்லாமியர் தரப்பிடமும் கூறப்பட்டுள்ளது.அனைவரும் அதை ஏற்றுக்கொண்டு சென்றுவிட்டனர். ஆனாலும் அந்த பதட்டம் நீடித்துக்கொண்டே வருகிறது.
0 comments: on "விநாயகர் ஊர்வலம்: முத்துப்பேட்டை பதட்டம்"
Post a Comment