ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் தகர்க்கப்பட்ட அமெரிக்க நியூயார்க் நகரின் புகழ்பெற்ற இரட்டைக் கோபுரம் இருந்த இடத்தில் புதிதாக அமையவுள்ள கட்டிடத்தின் அருகே, பள்ளிவாசலும் அதையொட்டி இஸ்லாமிய மையமும் எழுப்ப முஸ்லிம்கள் ஆர்வமாக உள்ளனர்.
'அமெரிக்காவில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை உண்டு. எனவே முஸ்லிம்கள் மசூதி எழுப்புவதை ஆட்சேபிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, மசூதி கட்டுவதற்கு ஆதரவான கருத்தை முன்னொரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இப்போது மீண்டும் மசூதி விஷயத்தில் தனது கருத்தை வலுவாக பதிவுசெய்துள்ளார்.
இரட்டை கோபுர வர்த்தக மைய கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட 9-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதில், அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியில்;
இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்தின் அருகே மசூதி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அங்கு ஒருவர் இந்து கோவில் கட்டும் போது, ஏன் மசூதி கட்ட கூடாது. அமெரிக்காவில் மத சுதந்திரம் உள்ளது. இது அவர்களின் விட்டுக் கொடுக்க முடியாத உரிமையாகும்.
அமெரிக்காவை பொறுத்த வரை ஆணும், பெண்ணும், சமமாக நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு என்று தனிப்பட்ட உரிமைகள் உள்ளன. அது போன்றுதான் மத உரிமையுமாகும்.
அங்கு கிறிஸ்துவ தேவாலயமும் கட்டலாம். யூதர்களின் வழிபாட்டு தலமும், இந்து கோவிலும் கட்டலாம். அது போன்று அங்கு மசூதியும் கட்ட முடியும்.
என்று ஆணித்தரமாக, அதே நேரத்தில் மதசார்பற்ற தனது கருத்தை ஒபாமா கூறியுள்ளதை முஸ்லிம்கள் மட்டுமன்றி, நடுநிலையாளர்கள் அனைவரும் நிச்சயம் வரவேற்கவே செய்வர்.
0 comments: on "சபாஷ் ஓபாமா!"
Post a Comment