முக்கூட்டுச்சாலை பகுதிகு வந்தடைவதற்கு முன்பாக ஊர்வலக்காரர்களின் கோஷத்தை எதிர்த்து இஸ்லாமிய இளைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து இஸ்லாமிய ஆதரவு கோஷங்களை எழுப்பினார்கள். அந்த இடத்திலேயே கலவரம் மூளும் நிலை இருந்தது. ஆனால் போலீசார் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
ஊர்வலம் சிறிது தூரம் சென்ற நிலையில் ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது கல் விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. அருகில் இருந்த கடைகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த கலவரத்தை தொடர்ந்து தஞ்சாவூர் எஸ்.பி. செந்தில்வேலன், டிஐஜி திருஞானம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கட்டுள்ளனர். இந்த கலவரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த கலவரம் தொடர்பாக இவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
0 comments: on "மதுக்கூரில் விநாயகர் ஊர்வலம்! கடைகள் வீடுகள் தகர்க்கப்பட்டன"
Post a Comment