ஹைதராபாத்: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக சட்டம் கொண்டுவர வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ராம்ஜன்மபூமி-பாபர் மசூதி தொடர்பான வழக்கில் இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு அமைந்தால், மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அவர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மத்திய அரசு சர்ச்சைக்குரிய அப்பகுதியை சிறப்பு மண்டலமாக அறிவித்து, ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தார்.
ராம்ஜன்மபூமி-பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் இம்மாத இறுதியில் அளிக்க உள்ள தீர்ப்பு இந்துக்களுக்கு எதிராக இருந்தால் என்ன நடக்கும் எனக் கேட்டதற்கு அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
0 comments: on "ராமர் கோவில் கட்ட புதிய சட்டம்! சுப்ரமணிய சாமி"
Post a Comment