மும்பை தாஜ் விடுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் 'ஊதிப்பெருக்கப்படுகிறது' என்றும் பாகிஸ்தான் அரசு இதன் பின்னணியில் இல்லை என்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறியுள்ளது பல்வேறு தரப்புகளிலிருந்தும் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு சல்மான் கான் அளித்த பேட்டி ஒன்றில், "பணக்காரர்கள் மீது இலக்கு வைத்ததால் மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விஷயங்கள் ஊதிப்பெருக்கப்படுகின்றன, இதற்கு முன்னர் ரயில்களிலும் சிறு ஊர்களிலும் கூட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இவை பற்றி யாரும் பேசுவதில்லை.
இதனை அனைவரும் கயிலெடுத்துள்ளனர் இதற்குக் காரணம் தாஜ், ஓபெராய் விடுதிகள் இதில் அடங்கியுள்ளதால்தான். தாக்குதல் நடந்தது ஏனெனில் எங்கள் பாதுகாப்பு தோல்வியடைந்துள்ளது.
பாகிஸ்தான் அரசு இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இல்லை என்பதை அனைவரும் அறிவர். எங்கள் பாதுகாப்பு தோல்வியடைந்துள்ளது. இதற்கு முன்னரும் நிறைய தாக்குதல் நடந்துள்ளது. அவை அனைத்தும் பாகிஸ்தானிலிருந்து நடத்தப்பட்டவை அல்ல. அவை உள்ளிருந்தே வந்தவைதான்." என்று சல்மான் அதிரடியாகக் கூறியுள்ளார்.
சிவ சேனைக் கட்சி சல்மானின் இந்தப் பேச்சை தேச விரோதம் என்று வர்ணித்துள்ளதோடு, சல்மான் கான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியத் தொலைக்காட்சிகளை பாகிஸ்தான் தடை செய்துள்ளபோது பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் ஏன் இவ்வாறு கூறவேண்டும்." என்று சிவ சேனாக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
0 comments: on "26/11 தாக்குதல் ஊதிப்பெருக்கப்படுகிறது : சல்மான் கான்"
Post a Comment