தலைப்புச் செய்தி

Tuesday, September 21, 2010

அயோத்தி தீர்ப்பு: கலகக்காரர்களை அடக்க ரூ. 72.5 கோடிக்கு 'லத்தி' வாங்கும் போலீஸ்

லக்னோ: அயோத்யா வழக்கின் தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வரவிருக்கிறது. எனவே, தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் ஏற்படும் கலவரம் உள்ளிட்ட நிலைமையை சமாளிக்க லத்திகள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது உ.பி. காவல்துறை.

இதுகுறித்து உ.பி. காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

லத்திகள் வாங்குவதற்காக உத்தர பிரதேச அரசு ரூ. 72.5 கோடி நிதி வழங்கியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வருவதையடுத்து யாராவது வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை அடக்க லத்திகள் தேவைப்படுகிறது.

மாநில போலீசிடம் நவீன ஆயுதங்கள் இருக்கின்ற போதிலும், கலக்காரர்களைக் கட்டுப்படுத்தும் லத்திகள் குறைந்த அளவே இருக்கின்றது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் புதிய லத்திகள் வாங்க அரசு ரூ. 72.5 கோடி நிதி வழங்கியிருக்கிறது.

இந்த நிதியில் போலீஸ் படைக்கு ரூ. 50 கோடியும், ஊர்க் காவல் படைக்கு ரூ. 16 கோடியும், பிராந்திய ரக்ஷா தல் ஜவான்களுக்கு ரூ. 6.5 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

கலவரம் மூண்டால் கலகக்காரர்களைக் கட்டுப்படுத்த லத்தி தவிர முகக் கவசம் உள்ள ஹெல்மெட்கள், உடல் கவசம் மற்றும் கேடயமும் வாங்க உள்ளோம்.

நவீன உலகத்தில் அதிநவீன சாதனங்கள் வந்ததையடுத்து லத்திகளின் பயன்பாடு குறைந்துவிட்டது. ஆனால் 1990-களில் போலீசாருக்கு பெரிதும் உதவியது லத்தி தான்.

ஏ.கே. 47, இன்சாஸ் துப்பாக்கிகள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், தலைக் கவசம் போன்ற நவீன சாதனங்கள் வந்ததையடுத்து பாரம்பரிய சாதனத்தின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.

பண்டிகைக் காலம் மற்றும் வரவிருக்கும் அயோத்யா தீர்ப்பை முன்னிட்டு செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்து நடந்த கூட்டங்களில் தான் போலீசாருக்கு லத்தியின் முக்கியத்துவம் தெரிந்தது.

இந்த கூட்டங்களின்போது கலவரம் உள்ளிட்ட சூழ்நிலைகளில் கலகக்காரர்களை கட்டுப்படுத்த லத்தி தான் சிறந்தது என்றும், அவை குறைவாக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநில போலீசாருக்கு தலா 1 லட்சம் லத்திகள், உடற்கவசங்கள், ஹெல்மெட்கள் வாங்கப்படுகிறது. அலகாபாத்தில் உள்ள போலீஸ் தலைமையகத்திற்கு இந்த சாதனங்கள் வாங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஊர்க் காவல் படைக்கு தலா 40,000 லத்திகள் அல்லது பாலிகார்பனேடட் கம்புகள், உடற்கவசங்கள், டார்ச்களும், பி. ஆர்.டி. ஜவான்களுக்கு தலா 20,000 லத்திகளும், பாலி கவசங்களும் வாங்கப்பட இருக்கிறது.

மரத்தால் ஆன ஒரு ராம்பூர் லத்தியின் விலை ரூ. 300 ஆகும். ஆனால் ரூ. 500 முதல் 700 வரை கிடைக்கிறது பாலிகார்பனேடட் கம்புகள் என்று அவர் கூறினார்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அயோத்தி தீர்ப்பு: கலகக்காரர்களை அடக்க ரூ. 72.5 கோடிக்கு 'லத்தி' வாங்கும் போலீஸ்"

Post a Comment