ஸ்ரீநகர்: "கஷ்மீரை இந்திய ராணுவம் ஆக்கிரமித்து அங்கு வாழும் அப்பாவி பொதுமக்களை பெண்கள் குழந்தைகள் என்று பாராமல் கொன்றுகுவித்து வருகிறது" என்று "ஜம்மு-கஷ்மீர் சுதந்திர முன்னனி(Jammu-kashmir liberation front)"-யின் துணைத் தலைவர் "ஜாவித் அஹ்மத் மிர்" தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்: ஒரு புறம் இந்திய அரசு கஷ்மீரில் அனைத்துக்கட்சிக் கூட்டம், அனைத்துக்கட்சி பிரதிநிதிக்குழு என்று புழம்பி வருகிறது. மறுபுறம் இந்திய ராணுவம் அப்பாவி மக்களை குழந்தைகள் பெண்கள் என்று பாராமல் கொன்றுகுவித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது.
ஊரடங்கு சட்டத்தின் காரணமாக ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களும், குழந்தைகளும் வெளியே வரமுடியாமல் தனது வீட்டில் அடங்கிகடந்து மருந்துகள் இன்று உயிரிழக்கிறார்கள்.
மேலும் இந்திய ராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சரியான சிகிச்சை வழங்கப்படுவது கிடையாது இதனாலும் பலர் உயிரிழக்கிறார்கள். உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்கள் கஷ்மீரில் இந்திய அரசால் நடத்தப்படுகிறது." இவ்வாரு அவர் தெரிவித்தார்.





0 comments: on "இந்தியா கஷ்மீரில் மனித உரிமைகளை மீறுகிறது "J-KLF" துணைத் தலைவர் குற்றச்சாட்டு."
Post a Comment