தர்மசாலா : இமாச்சல பிரதேச மாநில, மெட்ரிகுலேஷன் தேர்வில், தேர்வு எழுதாமலேயே 62 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலத்தில், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மெட்ரிகுலேஷன் தேர்வு நடந்தது. இதில், தேர்வு எழுதாமலேயே 62 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடியில், காகிலில் கல்வி நிலையம் நடத்தி வந்த அஸ்வின் டோக்ரா மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மெட்ரிக் தேர்வின் போது, 11 வெவ்வேறு தேர்வு மையங்களில் இருந்து, டோக்ரா மாற்று விடைதாள்களை வாங்கியுள்ளார். பின், அதை தனது கல்வி நிலையத்தில் படித்த மாணவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டு மையங்களுக்கு வந்த போது, உண்மை வெளியாகி உள்ளது.இதுகுறித்து, இமாச்சல பிரதேச பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரபாத் சர்மா, போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார், இமாச்சல பிரதேச பள்ளிக் கல்வித்துறையின் மூலம், 2010ம் ஆண்டு நடந்த தேர்வு ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது
0 comments: on "தேர்வு எழுதாமலேயே 62 மாணவர்கள் பாஸ்"
Post a Comment