கரூர்,செப்.:கரூர் மாவட்டத்தில் நான்கு சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்து முன்னணியினரே இதற்குக் காரணம் என புகார் கூறப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் புகளூர் பெந்தகொஸ்தே சபை, சிஎஸ்ஐ திருச்சபை, பைபாஸ் சாலை ஆர்.சி. சர்ச், இசிஐ சர்ச் ஆகியவற்றின் முன் பகுதியில் இருந்த சிலைகள், உண்டியல்கள், கண்ணாடி ஜன்னல்கள், கதவுகளை ஒரு கும்பல் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
அதேபோல,வேலாயுதம்பாளையம் எம்ஜிஆர் நகரில் உள்ள ஏஜி சர்ச்சின் முன்பகுதியில் மலம் போய் அசிங்கப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்து முன்னணியினரே இதற்குக் காரணம் என கிறிஸ்தவ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments: on "கரூரில் 4 தேவாலயங்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணி மீது புகார்"
Post a Comment