மனாமா:பஹ்ரைன் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையே இஸ்ரேலின் கொடி தீக்கிரையாக்கப்பட்டது.
பாராளுமன்ற கூட்டம் நடக்கும் பொழுது உஸாமா முஹன்னா என்பவர் இஸ்ரேல் கொடியை தீவைத்துக் கொளுத்தினார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற ஹாலில் புகை நிறைந்து, நடவடிக்கைகளை சபாநாயகர் நிறுத்திவைத்தார். அனைவரது கவனத்தையும் ஈர்க்கவே கொடியை எரித்ததாக உஸாமா தெரிவித்தார்.
காஸ்ஸா மக்களுக்கு அனைத்து ஆதரவுகளையும் அளிப்போம் என்றும், இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களை கண்டிப்பதாகவும் அஹ்மத் அல் ஸாத்தி எம்.பி கூறினார்.
பாராளுமன்றத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்போம் என்று சபாநாயகர் கலீஃபா அல் தஹ்ரானி கூறினார். பார்வையாளர்கள் மற்றும் எம்.பிக்கள் கடுமையான பரிசோதனைக்குப் பிறகே பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், தண்ணீர் கொண்டுவரும் பாட்டிலில் எரிபொருளை கொண்டுவந்து எம்.பி கொடியை எரித்துள்ளார் என்று சபாநாயகர்
தெரிவித்துள்ளார்.
தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் வெளிநடப்புச் செய்தனர். இஸ்ரேல் நடத்தும் விமானத் தாக்குதல்களில் நிரபராதிகளான நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் தாக்குதலை நிறுத்த எதுவுமே செய்யவில்லை என்று முஸ்லிம் லீக்(என்) தலைவர் சவுத்ரி நிஸார் அலி கான் பாராளுமன்றத்தில் கூறினார்.
டென்மார்க்கில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் இஸ்ரேல் தூதரகத்தின் மீது கல்வீசினர்.
1 comments: on "பஹ்ரைன் பாராளுமன்றத்தில் இஸ்ரேல் கொடி எரிப்பு!"
Nice article..
Book online bus ticket from Redbus
Post a Comment