தலைப்புச் செய்தி
Latest Posts

Wednesday, December 26, 2012

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்கள் "ஃபேஸ் புக்" பயன்படுத்த தடை!


பெண் பிள்ளைகளையும் "ஃபேஸ்புக்"கில் கணக்கு துவங்க அனுமதிக்க மாட்டேன், அவர்கள் "வேறு பெயர்களில்" ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கும் "தடை" விதிக்கப்பட்டுள்ளது, என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
ஒபாமாவின் மூத்த மகள் மாலியா (14), இளைய மகள் ஸாஷா (12).
இவர்களிடம் அறிமுகமில்லாத யாரும் நட்புக்கொள்வதை, தாம் விரும்பவில்லை.
எனவே, அவர்கள் ஃபேஸ்புக்கை பார்வையிடவும் - பயன்படுத்தவும் - கணக்கு துவங்கி பிறருடன் நட்புக்கொள்ளவும் "தடை" விதித்துள்ளேன்.
அவர்கள், வேறு பெயர்களில் ஃபேஸ்புக்கில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதையும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
எந்நிலையிலும் அவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன்.
இந்த தடை, குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியாகும் வரை நீடிக்கும் என்றார்.
ஒபாமாவின் இந்த கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க பெண்ணியவாதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பு:
பெண் சுதந்திரம் பற்றி வாய்க்கிழிய பேசும் அமெரிக்காவில், அதன் அதிபர் பொறுப்பிலிருப்பவரே, தன் மகள்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளபோது, பெண்களை கண்ணியமாக பாதுகாக்க வேண்டிய முஸ்லிம் சமூகத்தினர், தன் பிள்ளைகள் விஷயத்தில்பொறுப்பை உணர்ந்து செயல்படுவது அவசியம்.

read more...

சிறுபான்மையினர் கல்வி உதவியிலும் பாரபட்சம் : அதீப் எம்.பி., குற்றச்சாட்டு!


சிறுபான்மையினர் "கல்வி உதவி" திட்டத்துக்கு குறைந்த அளவு நிதி (பட்ஜெட்) ஒதுக்கப்படுவதால், அனைத்து மாணவர்களுக்கும் உதவி கிடைக்காத நிலை உள்ளது. அதேநேரம், தலித்துகள் உள்ளிட்ட பிரிவினருக்கு, பட்ஜெட் கட்டுப்பாடு இல்லாமல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் "ஸ்காலர்ஷிப்" கிடைப்பதாக முஹம்மத் அதீப் தெரிவித்தார்.
நேற்று சஹாரன்பூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய திட்டக்கமிஷனின் பாரபட்ச போக்கை புள்ளி விவரங்களுடன் அதீப் வெளியிட்டார்.
அரசின் கணக்குப்படி 13.4% இருக்கும் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய விகிதாச்சாரப்படி நலத்திட்டங்கள் கிடைப்பதில்லை, என்றார்.
2020ம் ஆண்டு வரையிலான "12ம் ஐந்தாண்டு திட்டத்தில்" முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூக மக்களின் மேம்பாட்டுக்காக பரிந்திரைக்கப்பட்ட தொகையில், மூன்றில் இரண்டு பங்கு குறைத்து நிதி ஒதுக்க உத்தரவிட்டுள்ளார் திட்டக்கமிஷன் துணைத்தலைவர், மாண்டேக் சிங் அலுவாலியா.
இந்த அளவு குறைத்து நிதி ஒதுக்கியுள்ளதால், எந்தவொரு திட்டத்திலும் விண்ணப்பிக்கும் (வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள) முஸ்லிம்களில் "மூன்றில் ஒருவர்" தான் பயன்பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், தலித் உள்ளிட்ட பிற சமூக மாணவ மாணவியருக்கு "பட்ஜெட் கட்டுப்பாடு இல்லாமல்" விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உதவி என்ற வகையில், திட்டம் செயல்படுத்தப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தார், மாநிலங்களவை உறுப்பினர் முஹம்மத் அதீப்.
read more...

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு!


PFIஅடையாளமும், உரிமைகளும் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு, உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஊட்டி, உன்னத சமுதாயமாக மாற்றும் உயர்வான லட்சியத்தை நோக்கி வழி நடத்தி செல்லும் நவீன சமூக இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய தேசிய தலைவர்களுக்கு கேரள மாநிலம் திரூரில்  உள்ள நகராட்சி ஸ்டேடியத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்விழாவில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர்கள் மாநில நிர்வாகிகளால் அறிமுகப்படுத்தப்பட்டனர்.நிகழ்ச்சியில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்கள் பங்கேற்றனர்.
read more...

Thursday, December 13, 2012

ஈராக்கில் ரகசியமாக நுழைந்த அமெரிக்க துருப்புக்கள்!

US troops secretly return to Iraq
சிரியா மற்றும் வட ஈராக்கில் நடந்துவரும் போராட்டங்களை கணக்கில் கொண்டு 3000_க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குவைத் வழியாக ஈராக்கினுள் நுழைந்துள்ளதாக பிரஸ் டிவி செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
ரகசியாமாக நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் சலாஹுத்தீன் பிராந்தியத்தின் ஃபலத் ராணுவ மையத்திலும் அல்-ஆசாத் விமான தளத்திலும் முகாமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் ராணுவ  உயரதிகாரிகள் உட்பட இன்னும் 17,000 அமெரிக்க ராணுவத்தினர் ஈராக்கினுள் ரகசியமாக நுழைய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஒன்பது வருட ஆக்கிரமிப்பிற்குப் பிறகு ஈராக் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குள்ளான ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து கடந்த 2011_ஆம் ஆண்டு ஈராக்கை விட்டு அமெரிக்கா தனது படையை வாபஸ் பெற்று ஈராக்கின் அண்டை நாடான குவைத்தில் வைத்திருந்தது.
கடந்த 2003_ஆம் ஆண்டு ஈராக்கில் பேரழிவு ஆயுதம் இருப்பதாகக்கூறி அமெரிக்காவும் அதன் கூட்டணி நேட்டோ படைகளும் ஈராக்கை ஆக்கிரமித்தன. ஆனால் ஈராக்கில் இதுவரை அவ்வாறு எந்த பேரழிவு ஆயுதங்களும் அமெரிக்காவால் காட்ட இயலவில்லை. மேலும் அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு 1 மில்லியன் ஈராக்கிகள் இதுவரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
read more...

Friday, November 23, 2012

கூடங்குளம் அணுக்கழிவுகளை கோலாரில் புதைப்பதா? – மக்கள் கடும் எதிர்ப்பு!

Protests against move to dump nuclear waste in KGF
Nov 23
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கப்பட்ட பிறகு, அதிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை, கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயலில், மூடப்பட்ட தங்கச் சுரங்கங்களில் சேமித்து வைக்கப் போவதாக இந்திய அரசு தெரிவித்திருப்பதற்கு கோலாரில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து இன்று(வெள்ளிக்கிழமை) ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக கோலார் தங்கவயல் மக்கள் உரிமை பாதுகாப்பு முன்னணியின் தலைவர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
கர்நாடக மாநில அரசியல் கட்சிகள் பலவும் இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்க ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்த ராஜேந்திரன், அணுக்கழிவுகளை கோலார் சுரங்கங்களில் சேமித்து வைப்பதாக கூறும் மத்திய அரசின் முடிவு கோலார் பகுதிவாழ் மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியிருப்பதாக கூறினார்.
இந்த அணுக்கழிவுகள் குறித்து தாங்கள் சில விஞ்ஞானிகளிடம் கலந்தாய்வு செய்ததாகவும், இந்த கழிவுகள் கோலாரில் கொண்டுவந்து சேமித்து வைக்கப்படுவதன் மூலம் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல, அங்குள்ள தாவரங்களுக்குக் கூட கடும் பாதிப்புக்கள் ஏற்படுத்தும் என்று தம்மிடம் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பதாகவும் ராஜேந்திரன் கூறினார். இந்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, தாங்கள் நீதிமன்றங்களை அணுகப்போவதாகவும் அவர் கூறினார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கப்பட்ட பிறகு, அதிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை, கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில், தற்போது பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டிருக்கும் தங்கச் சுரங்கங்களில் சேமித்து வைக்கப் போவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதனன்று தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து கோலார் பகுதியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
read more...

பின்லேடன் புதைக்கப்பட்ட பரபரப்பு தகவல்






கடந்த ஆண்டு மே 1 அன்று அமெரிக்காவின் நேவி சீல் குழுவால் கொல்லப்பட்டதாக கூறப்படும் அல் காயிதா தலைவ்ர் ஒசாமா பின் லேடன் எவ்வாறு புதைக்கப்பட்டார் என்ற தகவல்களை அஸோசியேட் பிரஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


தகவல் சுதந்திர சட்டத்தின் மூலம் இத்தகவலை பெற்றுள்ள அந்நிறுவனம் இஸ்லாமிய அடிப்படையில் ஒசாமாவின் உடல் கழுவப்பட்டு பின் வெள்ளை துணியில் வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

வெள்ளை துணியில் ஒசாமாவின் உடல் பின் ஒரு அரபியின் உதவியுடன் மத வாசகங்களை ராணுவ அதிகாரி ஒருவர் சொல்ல ஒசாமாவின் உடல் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு கடலில் எறியப்பட்டதாக சொல்கிறது.


ஒசாமா எங்கு புதைக்கப்பட்டார் என்ற விபரம் வெகு சிலருக்கே தெரியும் என்று கூறும் அவ்வறிக்கை ஒசாமா கொல்லப்பட்ட மறு தினம் மே 2 அன்று இது தொடர்பான மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகவும் சொல்கிறது.

ஆனால் ஒசாமாவின் உடல் எங்குள்ளது, ஏன் ஒசாமாவின் இறப்பு சான்று வெளியிடப்படவில்லை, இறந்தது ஒசாமா தான் என்பதை உறுதிபடுத்தும் டி.என்.ஏ டெஸ்ட் ஏன் எடுக்கப்படவில்லை என்பதற்கு விளக்கம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அசோசியடேட் பிரஸ் கூறியுள்ளது.


read more...

அமெரிக்கா செய்த இணைய யுத்தம்


இணைய யுத்தத்தில் அமெரிக்காவின் சதி-பிரான்ஸ் குற்றச்சாட்டு! முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சார்கோஸியின் இணையப் பக்கம் ஹாக் செய்து தடுக்கப்பட்டிருந்த சதியில் அமெரிக்கா இருந்ததாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மே மாதம் அதிபர் தேர்தலில் ஈடுபட்டிருந்த சார்கோஸியை வெற்றிபெற விடாமல் தடுப்பதற்காக இந்தச் சதியை மறைமுகமாக இருந்து செயற்படுத்தியது அமெரிக்காவே என்று பிரான்சில் இருந்து வெளிவரும் எல் எக்ஸ்பிரஸ் எழுதியுள்ளது.

சார்கோஸிக்காக தேர்தல் பணியாற்றிக் கொண்டிருந்த முக்கிய பணியார்களின் கணினிகள் செயற்படாமல் ஸ்தம்பிதமடைய வைக்கப்பட்டு, தேர்தல் பணிகள் முடங்கின. மேலும் அதிபர் தேர்தலின் முதலாவது, இரண்டாவது கட்டங்களில் இந்த வைரஸ் தாக்குதல் மூலம் கணினிகள் முடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அதிபருடைய கணினிப் பிரிவினர் மறுபடியும் இணைய வலையாக்கத்தை செம்மை செய்ய மூன்று தினங்கள் போராட வேண்டியிருந்துள்ளது.

அமெரிக்காவின் அதி உச்ச தொழில் நுட்பம் கொண்ட பிளம்ம என்ற தாக்குதல் நிகழ்ச்சித்திட்டத்தை ஆதாரமாகக் கொண்டு இந்தச் சதி வேலை நடாத்தப்பட்டுள்ளதாகவும் அப்பத்திரிகை கூறியுள்ளது.


இந்த நிலையில் பிரான்சின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளார்கள்.

read more...

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி சாத்தியமில்லாதது ஏன் ?




இந்தியாவின் மைய வங்கியான ரிசர்வ் பேங்க்கின்  ஆளுநர் டி.சுப்பாராவ் செய்தியாளர்களிடம் "இந்தியாவில், இஸ்லாமிய வங்கி  சாத்தியமில்லை" என்று கூறியுள்ளார். 


அவர் மேலும் கூறுகையில் "இஸ்லாமிய வங்கிக் கோரிக்கையின் பின்னிருக்கும் உயர்ந்த நோக்கம் பாராட்டத்தக்கது. ஆனால் அதற்கென்று சட்டத்தை உருவாக்காமல் இஸ்லாமிய வங்கி என்பது சாத்தியமற்றதே; எனினும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நிதியை இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குட்பட்டு முறைப்படுத்துவது பற்றி யோசிக்கலாம்" என்றும் சொன்னார்.

"இஸ்லாமிய வங்கியியலுக்கு என்று தனிச்சட்டத்தைக் கொண்டுவராமல் அதை நடைமுறைப்படுத்த இயலாது" என்ற ஆர்பிஐ ஆளுநர்,"வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிதியை முறைப்படுத்துவதில் இஸ்லாமிய வங்கிக் கோட்பாடுகள் அடிப்படையில் அமைந்த வேறு ஏதேனும் ஒன்றைப் பற்றி மைய வங்கி சிந்திக்கலாம்" என்று கருத்தளித்தார்.

கடந்த அக்டோபர் மாதம் முதல்வாரம் இஸ்லாமிய வங்கியியலை நடைமுறைக்குக் கொணரத் தேவையான சட்டதிருத்தங்களைச் செய்ய வேண்டி மத்திய அரசுக்கு மத்திய வங்கி கடிதம் எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.

read more...

அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் இல்லை! – தொடரும் அநீதி!

Karnataka High Court denies bail to Maudany again
பெங்களூர்:அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை கர்நாடகா நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடிச் செய்துள்ளது. சிகிட்சைக்காக ஜாமீன் அனுமதிக்கவேண்டும் என்று கோரி ஜாமீன் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் பாதுகாப்புடன் மஃதனிக்கு சொந்த செலவில் சிகிட்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய நீதிமன்றம் சிகிட்சை வேளையில் குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்க மறுத்துவிட்டது.
கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் மஃதனி. பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். ஆனால், விரைவிலேயே அவர் பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மீண்டும் அநியாயமாக கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா சிறையில் அடைக்கப்பட்டார்.
நீரழிவு உள்ளிட்ட நோய்களால் அவதிப்படும் மஃதனிக்கு ஒரு கண்ணின் பார்வை பறிபோனது. ஒரு காலை இழந்துள்ள மஃதனி நோய்களால் அவதிப்படும் வேளையில் அவரது சிகிட்சைக் குறித்து கர்நாடகா போலீஸ் அலட்சியம் காட்டி வருகிறது. இந்நிலையில் மஃதனிக்கு சிகிட்சை அளிக்க ஜாமீன் அனுமதிக்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு இரக்கம் காண்பிக்காத நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது.
read more...

Thursday, November 22, 2012

முஸ்லிம் ரசிகர்களை விலகச் சொல்வோம்... விஜய் நிகழ்ச்சிகளை முற்றுகையிடுவோம்! - தவ்ஹீத் ஜமாஅத்


சென்னை: நடிகர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் புறக்கணிப்போம் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் கோவை.ஆர்.ரஹ்மதுல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகளை துப்பாக்கி படத்திலிருந்து நீக்குவதாக உறுதியளித்தனர் தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் முருகதாஸும்.
நடிகர் விஜய் சார்பில் அவரது தந்தை இந்த உறுதியை அளித்தார். ஆனால் இப்போது படத்தில் எந்தக் காட்சியையும் நீக்கவில்லை. மாறாக சில காட்சிகளில் ஒலியை டம்மியாக்கியுள்ளனர்.
இது இஸ்லாமிய மக்களை மேலும் புண்படுத்தும் செயலாகும். இந்த அளவுக்கு முட்டாளாக எங்கள் சமூகம் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தும் வகையில், இனி விஜய்யின் மன்றங்களிலிருந்து அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் விலக வேண்டும் என்று வற்புறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம்.
மேலும் இனி நடிகர் விஜய் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அங்கே தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்," என்று தெரிவித்தார்.
read more...

கசாப் தூக்கிலிடப்பட்டது கண்டிக்கத்தக்கது:பழநெடுமாறன்!

கசாப் தூக்கிலிடப்பட்டது  கண்டிக்கத்தக்கது:பழநெடுமாறன்!
மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டது  கண்டிக்கத்தக்கது  என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன் கூறியுள்ளார். 

மும்பை தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவனான அஜ்மல் கசாப்புக்கு புனே எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. இதை கண்டித்துள்ள தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன் கூறுகையில்:

"கசாபை அவசர அவசரமாக  தூக்கில் போட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இது மனித நேயத்துக்கு எதிரான செயல்.மும்பை குண்டு வெடிப்பு மிக கொடூரமானது. நூற்றுக்கணக்கானோர்  கொல்லப்பட்ட இந்த செயலை கண்டிக்கிறேன். ஆனால் அதில் தொடர்புடைய குற்றவாளியை  சிறையில் வைத்து சீர்திருத்த வேண்டுமே தவிர மரண தண்டனை விதிக்க கூடாது.

காந்தி பிறந்த நம் நாட்டில் மரண தண்டனையை இன்னும் வைத்திருப்பது அவமானச்  செயல், மனித உயிரை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது. ஐ.நா. தனது உறுப்பு நாடுகளுக்கு மரண  தண்டனை கூடாது என்று தீர்மானம் கொண்டு வர உள்ள இந்த நேரத்தில் இந்த தூக்குத் தண்டனை விதித்திருப்பது கண்டிக்கத் தக்கது" என அவர் கூறியுள்ளார்.

read more...

காஸ்ஸாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது!


காஸ்ஸா:ஒருவாரத்திற்கும் மேலாக ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல்களுக்கு தற்காலிகமான ஓய்வு. எகிப்தின் தலைமையில் நடந்த அமைதி முயற்சிகள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைகளின் இறுதியில் நரவேட்டை உள்ளிட்ட அனைத்து தாக்குதல்களையும் நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.
ஒருவார காலமாக காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்தி வந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் 157 பேர் இறந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கையில் அதனை புறக்கணித்துவிட்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று மட்டும் 13 பேர் காஸ்ஸாவில் கொல்லப்பட்டனர்.
போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியானது காஸ்ஸாவில் மகிழ்ச்சி ஆரவாரம் ஏற்பட்டது. காஸ்ஸாவின் மீது தரை வழியாகவும், வான் வழியாகவும் இஸ்ரேல் நடத்தி வரும் அனைத்து தாக்குதல்களை நிறுத்துமாறு புதிய ஒப்பந்தம் கூறுவதாக பி.பி.சி தெரிவிக்கிறது.
அதேவேளையில், இஸ்ரேலின் அனைத்து அத்துமீறல்களும் தோல்வியை தழுவியதாக ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷ்அல் தெரிவித்துள்ளார். எகிப்து நடத்திய சமாதான முயற்சிகளுக்கு மிஷ்அல் நன்றி தெரிவித்தார். ஹமாஸின்  முக்கிய கோரிக்கை இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
read more...

அஃப்ஸல் குருவின் கருணை மனு: குடியரசு தலைவர் திருப்பி அனுப்பினார்!


புதுடெல்லி:பாராளுமன்றத் தாக்குதலில் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில்  தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அஃப்ஸல் குரு உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்கும் உள்துறை அமைச்சருக்கு குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக காத்திருக்கும் கருணை மனுக்களை அனுப்பி கொடுப்பது வழக்கமான நடவடிக்கை என்று குடியரசு தலைவர் மாளிகை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் முதல் தேதி ஷிண்டே பதவியேற்ற உடனேயே அஃப்ஸல் குரு உள்ளிட்ட கருணை மனுக்கள் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிக் கொடுக்கப்பட்டன. அந்தந்த மாநில அரசுகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிபாரிசுகள் உள்ளிட்ட 7 கருணை மனுக்கள் குடியரசு தலைவருக்கு கிடைத்துள்ளன. மரணத்தண்டனையை குறைக்கக் கோரி அஃப்ஸல் குருவின் மனைவி சமர்ப்பித்த கருணை மனுவை தள்ளுபடிச் செய்யவேண்டும் என்று டெல்லி அரசும், மத்திய உள்துறை அமைச்சகமும் சிபாரிசுச் செய்திருந்தன. ஆனால், அஃப்ஸல் குருவின் ஃபைல் கிடைத்தால் 48 மணி நேரங்களுக்குள் முடிவெடுப்பேன் என்று உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே ஊடகங்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.
2001-ஆம் ஆண்டு நிகழ்ந்த பாராளுமன்றத் தாக்குதலில் 2004-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அஃப்ஸல் குருவிற்கு மரணத்தண்டனையை தீர்ப்பாக அளித்திருந்தது.
read more...

Wednesday, November 21, 2012

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி பிரக்யா சிங், சுனில் ஜோஷி, இவர்களை தூக்கிலிடுவது எப்போது???


அஜ்மல் கசாபின் தீர்ப்பை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை! தவறு செய்தவன் யாராக இருந்தாலும்...

தண்டனை கொடுக்கவேண்டும் அதுவும் கடுமையாக என்பது இஸ்லாமிய பார்வையில் சரியே...

ஆனால் அந்த தண்டனை அனைவருக்கும் சமமாக இருந்தால் அதுதான் ஜனநாயக நாடு..

ஒரு அயோக்ய நாயின் வாக்குமூலம் பாருங்கள் இவர்களுக்கு தூக்கு எப்போது???

“மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்… இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன்… அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது… சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்…”
- ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.

கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரின் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன. 2007 நவம்பர் 11-ஆம் தேதியன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில், அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. மலேகான் நகரில் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமடைந்தார்கள்.

இப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம், பார்ப்பன – முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்று எவ்வித விசாரணையுமின்றி குற்றம் சாட்டின. 2007-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கசூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த போது, சம்ஜவ்தா விரைவு வண்டியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தியா-பாகிஸ்தானிடையே நல்லுறவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இக்குண்டு வெடிப்பை நடத்தியதாக பார்ப்பன – முதலாளித்துவ ஊடகங்கள் சகட்டு மேனிக்குக் குற்றம் சாட்டின. இது ஹூஜி மற்றும் லஸ்கர்-இ-தொய்பா ஆகிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களின் சதி என்று அமெரிக்காவும் கூறியது.

இக்குண்டு வெடிப்புகள் குறித்து ஆரம்ப விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே போலீசையும் துணை ராணுவப் படைகளையும் ஏவி முஸ்லிம் குடியிருப்புகளை அரசு சுற்றி வளைத்தது. சட்டப்படியும் சட்டவிரோதமாகவும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைக்கு ஆளாயினர். அவர்களது இளமையும் எதிர்காலமும் நொறுங்கிப் போயின. பயங்கரவாதி என்ற அவமானத்தோடு, அவர்களது குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டு கையறு நிலையில் தவித்தன. குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களைப் போலவே, குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்களும் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

***

கடந்த 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் நான்டெட் நகரில் வெடிகுண்டுகள் தயாரித்தபோது விபத்து நடந்து ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவர் மாண்டனர். ஐந்துபேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பார்ப்பன பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு அதிரடி போலீசு அடுத்தடுத்து கைது செய்து ஔரங்காபாத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களுள் 11 பேரை விடுவிக்க எத்தணித்தது. இதை எதிர்த்து உள்ளூர் முஸ்லிம்கள் போராடியதோடு, சி.பி.ஐ. விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகே, சி.பி.ஐ.யின் விசாரணை தொடங்கியது.

சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருளை முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான அறிகுறிகள் கிடைத்தன. மலேகான் குண்டு வெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இக்குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அகில பாரத வித்யார்த்தி பரிசத் எனும் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, பின்னர் அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு சிறப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டில் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டாள்.

அவளைத் தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 11 பேரை ஹேமந்த் கார்கரே கைது செய்தார். பிரக்யா சிங்கை விசாரணை செய்த போது, ம.பி.யைச் சேர்ந்த சுனில்ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முதலானோர் முக்கிய சதிகாரர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்கரே பலியானார். இதற்கிடையே சுனில்ஜோஷி இந்துவெறி பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.

மலேகான் மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரசில் வெடித்த குண்டுகள் ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்ததால், இக்குண்டு வெடிப்புகளில் இந்துவெறி பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டது. தயானந்த் பாண்டேயின் கணினியிலிருந்து கிடைத்த 37 உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டதை நிரூபித்துக் காட்டின. இதனடிப்படையில், கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.-இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டான். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18-ஆம் தேதியன்று டெல்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட அசீமானந்தா, இக்குண்டுவைப்புகளில் ஈடுபட்டது நாங்கள்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். போலீசாரின் முன்னிலையில் பெறப்படும் வாக்குமூலங்களை விட, நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சட்டப்படி உறுதியான ஆதாரங்களாகியுள்ளதால், குண்டுவைப்பு பயங்கரவாதச் செயல்களில் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.

மே.வங்கத்தைச் சேர்ந்த நாப குமார் எனப்படும் அசீமானந்தா, 1977-இல் ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியனாகி மே.வங்கத்திலும் பின்னர் அந்தமானிலும் ஆர்.எஸ்.எஸ்.-இன் பரிவாரங்களில் ஒன்றான வனவாசி கல்யாண் ஆசிரமத் தலைவராகப் பணியாற்றியுள்ளான். பின்னர் 1997-இல், இவன் குஜராத்தின் டாங் மாவட்டத்தில் ஷப்ரிதாம் என்னும் ஆசிரமத்தை நிறுவிக் கொண்டு சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தான். இவன் குஜராத் முதல்வர் மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சுதர்சன், மோகன் பாகவத் ஆகியோருக்கு நெருக்கமானவன். பயங்கரவாதிகளின் சித்தாந்த குருவான இவன்தான் அஜ்மீர், ஐதராபாத், மலேகான் முதலான இடங்களில் குண்டுவைக்க இலக்குகளைத் தீர்மானித்து வழிகாட்டியுள்ளான். 2008-இல் பெண் சாமியாரான பிரக்யா சிங் கைது செய்யப்பட்ட பிறகு, அசீமானந்தா தப்பியோடி தலைமறைவாகிவிட்டான். கடந்த 2010 நவம்பர் 19-ஆம் தேதியன்று அரித்துவாரில் பதுங்கியிருந்தபோது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டான்.

தன்னோடு இக்குண்டுவைப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்தியப் பிரதேச ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான (பிரச்சாரக்) சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான சந்தீப் டாங்கே, மூத்த ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான ராம்ஜி, தேவேந்திர குப்தா, மேல்மட்ட உறுப்பினரான சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோஹித், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான யோகி ஆதித்யானந்த், குஜராத்தின் விவேகானந்தா சேவா கேந்திரத்தின் பாரத் பாய், அந்த அமைப்பின் மாநில அமைப்பாளரான டாக்டர் அசோக், முக்கிய பிரமுகர்களான லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, ஜம்முவைச் சேர்ந்த சாரதா பீட சாமியார் தயானந்த் பாண்டே ஆகியோரின் பெயர்களையும் அவன் வாக்குமூலமாக அறிவித்துள்ளான். “யாருடைய தூண்டுதலோ, நிர்ப்பந்தமோ இல்லாமல், எவ்வித அச்சமுமின்றி சுய நினைவோடு” தான் இந்த வாக்குமூலத்தை அளிப்பதாகவும் அவன் தெரிவித்துள்ளான்.

ஐதராபாத்தின் சன்சல்குடா சிறையில் அசீமானந்தா அடைக்கப்பட்டபோது, அந்தச் சிறைக் கொட்டடியில் அவனுடன் இருந்த கைதியான கலீம் என்ற இளைஞர், வயதில் மூத்தவரான அவனுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, உணவு எடுத்து வந்து கொடுப்பது முதலான பல உதவிகளைச் செய்துள்ளார். ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பையொட்டி கைது செய்து சிறையிடப்பட்ட அப்பாவி இளைஞர்தான் கலீம். குண்டு வைத்த அசீமானந்தா, தன்னால் ஒரு அப்பாவி முஸ்லிம் இளைஞன் சிறையில் வதைபடுவதைக் கண்டு வருந்தியதாகவும், மனசாட்சி உலுக்கியதாகவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் உண்மைகளை வாக்குமூலமாக அளிப்பதாகவும் தெரிவித்துள்ளான்.

இப்பயங்கரவாதச் சதித் திட்டத்தில் முக்கியமானவனாகிய சுனில் ஜோஷி, கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களாலேயே கொல்லப்பட்டான். இக்குண்டுவெடிப்பு வழக்கில் மேலிருந்து கீழ்மட்டம் வரை சங்கிலித் தொடர்போல பலர் கைதாகி வருவதால், ஆர்.எஸ்.எஸ். தலைமை தனது விசுவாச ஊழியனையே கொன்றொழிக்க உத்தரவு பிறப்பித்திருக்க வாய்ப்புள்ளது. இதேபோன்ற நிலைமை தனக்கும் ஏற்படும் என்பதாலும், முஸ்லிம் இளைஞரால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் சேர்ந்துதான் அசீமானந்தாவை ஒப்புதல் வாக்குமூலத்துக்குத் தள்ளியிருக்க வேண்டும்.

கடந்த டிசம்பர் 20-ஆம் தேதியிட்டு அசீமானந்தா, இந்திய அரசுத் தலைவிக்கும் பாகிஸ்தான் அதிபருக்கும் பாவமன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளான். அதில், அஜ்மீர், மலேகான், ஐதராபாத், சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர்களில் நானும் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளான். ஐதராபாத்தின் சஞ்சலகுடா சிறையிலிருந்து அவன் எழுதிய இக்கடிதங்கள் இப்போது ஊடகங்களில் பகிரங்கமாகியுள்ளது.

***

பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் அசீமானந்தாவைச் சித்திரவதை செய்து கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், இந்துத்துவப் பயங்கரவாதம் என்ற அவதூறு கிளப்பப்படுவதாகவும் வழக்கம் போலவே கூச்சலிடுகின்றன. ஆனால் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமின்றி, வலுவான தடயவியல் ஆதாரங்களும் சி.பி.ஐ. விசாரணையில் கிடைத்துள்ளன. புதுப்புது அமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கி, இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை அத்தகைய அமைப்புகளின் பெயரால் நடத்தி வருவதை ஆர்.எஸ்.எஸ். ஒரு உத்தியாகக் கொண்டு இயங்கி வருவதும் இப்போது நிரூபணமாகியுள்ளது.

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நோக்கியா செல்போனும் அதிலுள்ள வோடபோன் சிம் கார்டும் குண்டு வைக்கப்பட்ட இடத்தில் கிடைத்துள்ளன. இது, குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடிக்குமாறு செய்து அதன் மூலம் மின் இணைப்பு பெற்று குண்டுகளை வெடிக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்ப முறையாகும். இதேபோன்ற செல்போன் மூலமாக குண்டுகளை வெடிக்கச் செய்யும் முறையில்தான் சம்ஜவ்தா விரைவு வண்டியிலும் குண்டு வெடித்துள்ளது. மெக்கா மசூதியில் 6.53 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டது. அதே வகையான பேட்டரிகள்தான் சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுக்கான வார்ப்பு இரும்பு உலோகமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இத்தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் இக்குண்டுவெடிப்புகள் அனைத்திலும் ஒரு இந்துவெறி பயங்கரவாத கும்பல் ஈடுபட்டுள்ளதென புலனாவுத் துறையினர் அறுதியிட்டனர்.

செல்போன்கள் வாங்கப்பட்ட இடமும், வாங்கிய நபரின் பெயர் பாபுலால் யாதவ் என்பதும், போலியான ஆவணங்களைக் கொடுத்து இதேபெயரில் 11 சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தன. பாபுலால் யாதவ் வாங்கிய செல்போன்களின் குறியீட்டு எண்ணை வைத்து அவற்றில் நான்கு செல்போன்களை ராஜஸ்தானிலுள்ள ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்கள் பயன்படுத்தி வருவதை வைத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக பாரத் ரித்தேஷ்வர் உள்ளிட்ட இதர சதிகாரர்கள் சிக்கினர்.

இவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் முதலான பிற மாநிலங்களிலிருந்தும் இப்பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்களைத் திரட்டியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். மட்டுமின்றி அதன் பரிவாரத்தைச் சேர்ந்த பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத், அபிநவ் பாரத், ஜெ வந்தேமாதரம், வனவாசி கல்யாண் ஆசிரமம் முதலானவற்றிலிருந்தும் ஆட்களைப் பொறுக்கியெடுத்து மூன்று குழுக்களை உருவாக்கினர். இதன்படி, ஒரு குழு நிதி ஏற்பாடுகளையும் வாகன ஏற்பாடுகளையும் செய்யும். அடுத்த குழு, வெடிகுண்டுகளையும் தேவையான சாதனங்களையும் ஏற்பாடு செய்யும். கடைசியாக உள்ள குழு, குண்டு வைப்புகளில் ஈடுபடும். ஒரு குழுவினருக்கு மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இதனால் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இந்தச் சதித் திட்டத்துடன்தான் இப்பயங்கரவாதக் கும்பல் இயங்கியது என்பதும் இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி, 2002-இல் குஜராத் பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடங்கிவைத்த கோத்ரா எம்.எல்.ஏ.வான ஹரேஷ் பட்டுக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையில், டீசல் வெடிகுண்டுகளும் பைப் வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டு குஜராத் பயங்கரவாதப் படுகொலையின்போது இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன என்பதும், சபர்கந்தா மாவட்ட விசுவ இந்து பரிசத்தின் தலைவரான தவால் ஜெயந்தி பட்டேலின் கல்குவாரியில் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிகுண்டுகள் ஏராளமாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதும் ஏற்கெனவே ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது. மேலும், கடந்த 2007-ஆம் ஆண்டில் “தெகல்கா” வார இதழ் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிச பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறியாட்டத்தையும், இந்துவெறி பயங்கரவாதிகளிடையே ஊடுருவி அந்தக் கொடூரங்களை அரங்கேற்றியவர்களின் வாயிலிருந்தே மறுக்க முடியாத ஒப்புதல் வாக்குமூலங்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டு தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்து முன்னணி கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்பதும் நிரூபணமாகியுள்ளது.

உண்மைகள் அம்பலமானபோதிலும், ம.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததால் இந்துவெறி பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. நெருக்கடிகள் அதிகரித்த பின்னரே ம.பி. போலீசு வேறு வழியின்றி இந்துவெறி பயங்கரவாதிகளில் சிலரைக் கைது செய்தது. அஜ்மீர், மெக்கா மசூதி விசாரணைகளில் உண்மைகள் வெளிவந்துள்ள போதிலும், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் போலீசார் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆந்திராவிலும் ராஜஸ்தானிலும் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வதைக்கப்பட்ட பின்னர், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பாகிய போதிலும், வேறொரு பொய்வழக்கு சோடித்து அவர்களை மீண்டும் சிறையிலடைத்து வதைத்தது, இம்மாநிலங்களின் போலீசு.

இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.-இன் பயங்கரவாதம் அடுத்தடுத்து வெளியான போதிலும், ஒருசில ஆங்கில ஊடகங்கள் மட்டுமே இவற்றை வெளியிட்டுள்ளனவே தவிர, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அவை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்களும் நக்சல்பாரிகளும்தான் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே போலீசும் அதிகார வர்க்கமும் ஒருதலைப்பட்சமாக அணுகுகின்றன. மதச்சார்பற்றவர்களாகக் கூறிக்கொள்ளும் “இந்து’’க்களே கூட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இரகசிய குண்டுவைப்புகள் மூலம் அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் பயங்கரவாதச் செயல்களில் இறங்க மாட்டார்கள் என்றே இன்னமும் கருதுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை. உண்மைகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ள போதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இதுகுறித்து வாய்திறப்பதுமில்லை. இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், இந்நாட்டின் அரசியலமைப்பு முறையின் பிரிக்கமுடியாத அங்கமாக இந்துத்துவம் கோலோச்சுவதாலும் அரசும் ஓட்டுக்கட்சிகளும் ஊமையாகி நிற்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிரூபணமாகியிருப்பது மட்டுமல்ல; நாட்டுக்கும் மக்களுக்கும் பேரபாயமாகிவிட்ட இப்பயங்கரவாத கும்பலை கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவோ, சட்டரீதியாகவோ, ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் மூலமாகவோ வீழ்த்திட முடியாது என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றிணைத்துப் போராடுவதும், இக்கொடிய பயங்கரவாத மிருகங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதும், நேருக்குநேராக நின்று எதிர்த்து முறியடிப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் அவசர அவசியக் கடமையாகியுள்ளது. இவர்களின் தூக்கு தண்டனை உறுதி செய்வதே அனைத்து மனிதநேயமுள்ள மக்களின் நடுநிலை கருத்தாகும்... கசாபின் தீர்ப்பையும் மக்கள் பார்த்துள்ளனர் இந்த தேச துரோகிகளின் தீர்ப்பையும் மக்கள் பார்ப்பார்கள்.


read more...

மனித உருவத்தில் பலரின் ரத்தத்தை குடித்த பால் தக்கரே போன்றகொலைகாரர்களுக்கு ஏன் அரசு மரியாதை?


சிவசேனா தலைவர் பால் தக்கரே இறுதி ஊர்வலத்தின் போது அவர் மீது இந்திய தேசியக்கொடி போர்த்த பட்டிருந்தது. ஒருமுறை கூட தேர்தலில் நிற்காத இந்த போரையே பார்காத அரசருக்
கு எதற்கு அரசு மரியாதை?

நாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரர்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்திர்காக பாடுபட்ட அரசியல் தலைவர்களுக்கும் மட்டும் கிடைக்கும் கவுரவம் இந்த இறுதி மரியாதை...ஆனால் பால் தக்கரே போன்றகொலைகாரர்களுக்கு ஏன் இந்த மரியாதை..

இவர்
என்ன...

1.ஜனாதிபதியா..

2.முதலமைச்சரா..

3.நாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரரா..

4.சமூக வளர்ச்சிகாக போராடியவரா..

உண்மையை சொல்ல போனால்..மேலே குறிப்பிட்டுல்ல அனைத்திற்கும் எதிரானவர்..அவர் செய்த சாதனைகள் என்ன தெரியுமா?

1.1999-ல் தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் நிற்க்கவும் ஓட்டுப்போட தடை செய்யப்பட்ட ஒரே அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர்..

2.1992 -ல் நடந்த மிகப்பெரிய கலவரத்தின் சூத்திரதாரி.

3.சிவசேனை என்ற பெயரில் உள்நாட்டு கலவரத்தை நடத்த கலவரப்படை உருவாக்கியவர்.

4.2002 -ல் இஸ்லாமியர்களுக்கு எதிராக தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்தவர்.

5.தென் இந்தியர்கள் மகாராஸ்டிர மாநிலத்தில் இருக்ககூடாது என்று அறிவிப்பு விட்டவர்.

6.சிவசேனை படையை கொண்டு வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்.

இந்திய நாட்டில் இஸ்லாமியர்கலும் கிறிஸ்தவர்களும் புற்று நோய் போன்றவர்கள் அவர்களை அழிக்கும் வரை ஓயகூடது என்று கூரியவர்.இந்திய தேசியக்கொடியின் மூன்று வண்ணங்களில் காவிவண்ணத்தை மட்டும் திணிக்க முயன்ர அவருக்கு தேசியக்கொடி மரியாதை தேவையா?

நாட்டில் பிரிவினையை கொண்டுவந்து நாட்டின் அமைதியை குலைத்து,பலரின் உயிரை பறித்த இவருக்கு ஏன் தேசிய மரியாதை?

தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்த இவர் தீவிரவாதி இல்லையா?

மனித உருவத்தில் பலரின் ரத்தத்தை குடித்த இவரும், நாட்டு மக்களுக்காக எல்லையில் உயிர் விட்ட மாபெரும் வீரர்களும் சமமா?


Mohamed Sulaiman
read more...

'இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு' என்கிறார் துருக்கி பிரதமர் எர்துகான்!


israel websitesகாஸ்ஸாவில் விமானத் தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை கொலை செய்யும் இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்று துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் கூறியுள்ளார். இஸ்தான்புல்லில் நடந்த யுரேஷியன் இஸ்லாமிக் கவுன்சில் மாநாட்டில் உரை நிகழ்த்தினார் அவர்.
அவர் தனது உரையில் கூறியது: 'ஸ்லாத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்துபவர்கள், முஸ்லிம்கள் கூட்டாக படுகொலை செய்யப்படும் போது கண்ணை மூடிக்கொள்கின்றார்கள். காஸ்ஸாவில் குழந்தைகள் கொலை செய்யப்படுவதை இவர்கள் கவனிப்பதில்லை. இஸ்ரேலின் செயல் யங்கரவாதமாகும். ஆகையால் தான் அந்நாட்டை பயங்கரவாத நாடு என்று நான் அழைக்கிறேன்' இவ்வாறு எர்துகான் கூறினார்.
read more...

கசாப் தூக்கு கடைசிவரை ரகசியமாக வைக்கப்பட்டது ஏன்?


கசாப் தூக்கு கடைசிவரை ரகசியமாக வைக்கப்பட்டது ஏன்?மும்பை தாக்குதல் சம்பவத்தில் இன்று காலை தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்படுவது பற்றி இறுதிநேரம் வரை நாள் பற்றிய ரகசியம் காக்கப்பட்டதாக மும்பையில் மராட்டிய முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னதாகவே கசாப் தூக்கில் இடப்படும் விவரத்தை பாகிஸ்தானுக்கு தெரிவித்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது, அஜ்மல் கசாப்பை தூக்கிலிடும் தேதி குறித்து முடிவானது. ஆனால், அவரது தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்த தகவல் வெளியே கசியாமல் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக இந்த விவகாரத்தில் ரகசியம் காக்கப்பட்டதாக, மகாராஷ்டிர மாநில முதல்வர் சவான் தெரிவித்தார்.

இதையொட்டியே, இந்தியா வருகை தருவதாக இருந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ரஹ்மான் மாலிக்கின் வருகையும் தவிர்க்கப்பட்டதாம்.

read more...

புனேயில் அடக்கம் செய்யப்பட்டது கசாபின் உடல்

தூக்கிலிடப்பட்ட கசாப்பின் உடல் புனே எரவாடா சிறை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கசாப்பின் உடலை பெற பாகிஸ்தான் அரசு முன்வராததால் இந்தியாவிலேயே அடக்கம் செய்யப்பட்டது என மகாராஷ்டிர முதல்வர் பிருத்திவிராஜ் சவான் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தூக்கிலிடுவதற்கான தேதியை நீதிபதி தான் முடிவு செய்தார் எனவும் விளக்கமளித்துள்ளார்
read more...

இந்தியாவுக்கு ஜப்பான் கொடுக்கும் ரூ.12,430 கோடி கடன்



NOV 21
இந்தியாவின் சரக்கு போக்குவரத்து திட்டத்துக்கு ஜப்பான் ரூ.12,430 கோடி கடன் வழங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா கூறினார். கம்போடியா தலைநகர் நாம¢பென்னில் நடந்த கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். இதன்பின், பிரதமர் மன்மோகனும், ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடாவும் நேற்று சந்தித்து பேசினார்.

 அப்போது, தென்னிந்தியாவில் சரக்கு போக்குவரத்துக்கான பிரத்யேக சாலை அமைக்கும் திட்டத்தின் 2ம் கட்டப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.12,430 கோடி கடன் வழங்குவதாக நோடா தெரிவித்தார். இதற்கு பிரதமர் மன்மோகன் மகிழ்ச்சி தெரிவித்தார். டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் முதலீடு செய்தது போல ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று அவர் கூறினார்.

ஜப்பான் பிரதமர் நோடா கூறுகையில், ‘இந்தியா ஜப்பான் நாடுகளிடையே 60 ஆண்டுகளுக்கு மேலாக நட்புறவு நிலவுகிறது. இந்தியாவில் அதிவிரைவு ரயில்வே அமைப்பது குறித்து தொடர்ந்து பேச்சு நடத்த ஜப்பான் ஆர்வமாக உள்ளது’ என்று கூறினார்.

அரிய கச்சா பொருட்கள் ஏற்றுமதி மற்றும் சமுதாய பாதுகாப்பு தொடர்பாக நவம்பர் 16ம் தேதி டோக்கியோவில் இரு நாடுகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இரு தலைவர்களும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். ஜப்பானுக்கு நவம்பர் 15ம் தேதி முதல் 3 நாள் பயணத்தை மேற்கொள்ள மன்மோகன் திட்டமிட்டிருந்தார். ஆனால், ஜப்பானில் தேர்தல் அறிவிப்பு வெளியாகி சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதால் பிரதமரின் ஜப்பான் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.
read more...

பஹ்ரைன் பாராளுமன்றத்தில் இஸ்ரேல் கொடி எரிப்பு!


மனாமா:பஹ்ரைன் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையே இஸ்ரேலின் கொடி தீக்கிரையாக்கப்பட்டது.
பாராளுமன்ற கூட்டம் நடக்கும் பொழுது உஸாமா முஹன்னா என்பவர் இஸ்ரேல் கொடியை தீவைத்துக் கொளுத்தினார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற ஹாலில் புகை நிறைந்து, நடவடிக்கைகளை சபாநாயகர் நிறுத்திவைத்தார். அனைவரது கவனத்தையும் ஈர்க்கவே கொடியை எரித்ததாக உஸாமா தெரிவித்தார்.
காஸ்ஸா மக்களுக்கு அனைத்து ஆதரவுகளையும் அளிப்போம் என்றும், இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களை கண்டிப்பதாகவும் அஹ்மத் அல் ஸாத்தி எம்.பி கூறினார்.
பாராளுமன்றத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்போம் என்று சபாநாயகர் கலீஃபா அல் தஹ்ரானி கூறினார். பார்வையாளர்கள் மற்றும் எம்.பிக்கள் கடுமையான பரிசோதனைக்குப் பிறகே பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், தண்ணீர் கொண்டுவரும் பாட்டிலில் எரிபொருளை கொண்டுவந்து எம்.பி கொடியை எரித்துள்ளார் என்று சபாநாயகர்
தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் வெளிநடப்புச் செய்தனர். இஸ்ரேல் நடத்தும் விமானத் தாக்குதல்களில் நிரபராதிகளான நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகள் தாக்குதலை நிறுத்த எதுவுமே செய்யவில்லை என்று முஸ்லிம் லீக்(என்) தலைவர் சவுத்ரி நிஸார் அலி கான் பாராளுமன்றத்தில் கூறினார்.
டென்மார்க்கில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் இஸ்ரேல் தூதரகத்தின் மீது கல்வீசினர்.
read more...