மும்பை தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவனான அஜ்மல் கசாப்புக்கு புனே எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது. இதை கண்டித்துள்ள தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன் கூறுகையில்:
"கசாபை அவசர அவசரமாக தூக்கில் போட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இது மனித நேயத்துக்கு எதிரான செயல்.மும்பை குண்டு வெடிப்பு மிக கொடூரமானது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட இந்த செயலை கண்டிக்கிறேன். ஆனால் அதில் தொடர்புடைய குற்றவாளியை சிறையில் வைத்து சீர்திருத்த வேண்டுமே தவிர மரண தண்டனை விதிக்க கூடாது.
காந்தி பிறந்த நம் நாட்டில் மரண தண்டனையை இன்னும் வைத்திருப்பது அவமானச் செயல், மனித உயிரை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது. ஐ.நா. தனது உறுப்பு நாடுகளுக்கு மரண தண்டனை கூடாது என்று தீர்மானம் கொண்டு வர உள்ள இந்த நேரத்தில் இந்த தூக்குத் தண்டனை விதித்திருப்பது கண்டிக்கத் தக்கது" என அவர் கூறியுள்ளார்.
0 comments: on "கசாப் தூக்கிலிடப்பட்டது கண்டிக்கத்தக்கது:பழநெடுமாறன்! "
Post a Comment