தலைப்புச் செய்தி

Sunday, November 18, 2012

புனித திருக்குர்ஆனில் கூறப்படும் ‘ஸிஜ்ஜீல்’ என்னும் கல்லை கண்டுபிடித்ததாக தகவல்!


man finds a “Sijjeel” stone and refuses to sellதம்மாம்:புனித திருக்குர்ஆனில் ஃபீல்(யானை) அத்தியாயத்தில் கூறப்படும் ஸிஜ்ஜீல் என்னும் கல்லை கண்டுபிடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. சவூதி அரேபியாவின் ஜரபா பள்ளத்தாக்கில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸிஜ்ஜீல் கல் கண்டுபிடித்ததாக சவூதி குடிமகன் ஒருவர் கூறியுள்ளார்.
சவூதி அரேபியாவில் இருந்து வெளியாகும் உள்ளூர் பத்திரிகையான ‘ஸபக்’ அந்நாட்டைச் சார்ந்த ஒருவருக்கு இக்கல் கிடைத்துள்ளதாக செய்தியை வெளியிட்டுள்ளது. ஸிஜ்ஜீல் கற்களைக் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. கஃபா புனித இல்லத்தை தாக்க வந்த அப்ரஹா என்ற மன்னனையும், அவனது யானைப் படைகளையும் தோற்கடிக்க அல்லாஹ், வானில் இருந்து அனுப்பிய அபாபீல் பறவைகளின் அலகில் ஸிஜ்ஜீல் கற்கள் இருந்ததாகவும், அதனை உபயோகித்து அப்ரஹாவும் அவனது படைகளும் தோற்கடிக்கப்பட்டதாகவும் திருக்குர்ஆன் விவரிக்கிறது.
அதேவேளையில் தற்போது கிடைத்துள்ளதாக கூறப்படும் கல், திருக்குர்ஆனில் கூறப்படும் ஸிஜ்ஜீல் கல் தானா? என்பது குறித்து சோதனை நடத்தி உறுதிச்செய்யவேண்டும் என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.
அப்ரஹாவும்,அவனது படைகளும் நீண்ட நேரம் தங்கிய ஜரபா பள்ளத்தாக்கில் இருந்து 131 கிராம் எடைக் கொண்ட கல் அந்த இளைஞருக்கு கிடைத்துள்ளது செய்தி வெளியானதைத் தொடர்ந்து பெரும் விலை கொடுத்து அதனை வாங்குவதற்கு ஏராளமானோர் களமிறங்கியுள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "புனித திருக்குர்ஆனில் கூறப்படும் ‘ஸிஜ்ஜீல்’ என்னும் கல்லை கண்டுபிடித்ததாக தகவல்!"

Post a Comment