துபாய்:ஐக்கிய அரபு அமீரக துபாயின் ஜூமைரா லேக்ஸ் டவர் பகுதியில் உயரமான கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டது. இவ்விபத்தில் அக்கட்டிடம் உருக்குலைந்தது.
நவம்பர் 18 அன்று அதிகாலை 2:30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் தம்வீல் டவர்(Tamweel Tower) உருக்குலைந்தது. உயிரிழப்பைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை. கட்டிடத்தின் கூரைப் பகுதியில் ஏற்பட்ட தீயானது கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. தீ அணைப்புப் படையினர் உடனே விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் காலை 7:30மணிக்கு தான் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.




0 comments: on "துபாயில் உயரமான கட்டிடத்தில் தீ விபத்து!"
Post a Comment