தலைப்புச் செய்தி

Tuesday, November 20, 2012

ஃபேஸ்புக் பெண் கைது: மகா. முதல்வருக்கு எச்சரிக்கை கடிதம்!


பால்தாக்கரேவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து எழுதிய பெண் கைது  செய்யப்பட்டதை கண்டித்து மகாராஷ்ட்ரா முதல்வருக்கு பிரஸ் கவுன்சில் ஆப்  இந்தியாவின் தலைவரும்,முன்னாள் தலைமை நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு  எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக அவர் மகாராஷ்ட்ரா முதல்வர் பிரித்வி சவாணுக்கு எழுதியுள்ள  கடிதத்தில்,இவ்விவகாரத்தில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

மத உணர்வுகளை புண்படுத்தியதாக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒரு பந்த்க்கு  எதிராக கருத்து தெரிவித்தால்,அது மத உணர்வை புண்படுத்துவதாக கூறுவது என்னை  பொறுத்த வரையில் அபத்தமானது.

அரசியல் சாசனத்தின் 19(1) ஆவது பிரிவு, கருத்து சுதந்திரம் அடிப்படை உரிமை  என்பதை உறுதிப்படுத்துகிறது.நாம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோமே  தவிர...பாசிச சர்வாதிகார நாட்டில் அல்ல.

அரசியல் சாசனத்தின் 341 மற்றும் 342 ஆகிய பிரிவுகளின் படி பார்த்தால்,  உண்மையில் இந்த கைதே ஒரு கிரிமினல் செயலாக தோன்றுகிறது.

தவறாக ஒருவரை கைது செய்வதோ அல்லது ஒருவரை குற்றம் புரிந்ததாக தவறாக  சேர்ப்பதோ குற்றமாகும். 


எனவே குறிப்பிட்ட அப்பெண்னை கைது செய்த போலீசார் மற்றும் கைது செய்ய  உத்தரவிட்ட  போலீஸ் அதிகாரி,எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்களை  உடனடியாக சஸ்பெண்ட் செய்து,கைது செய்வதோடு,அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்  பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதை செய்ய தவறினால்,அரசியல் சாசனப்படி பதவிப்பிரமாணம் எடுத்த நீங்கள், உங்கள்  மாநிலத்தை நீங்கள் ஜனநாயக முறையில் நடத்த இயலாத நிலையில் உள்ளீர்கள் என்ற  எண்ணத்திற்கு நான் வர நேரிடும்.அதன் பின்னர் அதன் சட்ட விளைவுகளையும் நீங்கள்  சந்திக்க நேரிடும்” எனக் கூறியுள்ளார். 

முன்னதாக பால்தாக்கரே மறைவை தொடர்ந்து அவரது இறுதிச் சடங்கு நடைபெற்ற  நேற்றைய தினம மும்பை நகரில் முற்றிலும் முழு அடைப்பு நிலை காணப்பட்டது.

இதனை விமர்சித்து சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில், “தாக்கரே போன்றவர்கள்   தினமும் பிறக்கிறார்கள்...இறக்கிறார்கள்...அதற்காக பந்த் நடத்த வேண்டுமா?” என்று  கருத்து பதிந்த பெண்ணும்,அதற்கு 'லைக்' போட்ட பெண்ணும் இன்று கைது   செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் இபிகோ 205 (ஏ) மத உணர்வுகளை   புண்படுத்தியது மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்  பதிவு செய்யப்பட்டது.

குறிப்பிட்ட அந்த பெண் தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு,   மன்னிப்புக்கோரியபோதிலும், சிவசேனா தொண்டர்கள் சுமார் 2,000 பேர் அந்த   பெண்ணின் மாமா நடத்தி வரும் கிளினிக்கை அடித்து நொறுக்கி உள்ளனர்.

இதனிடையே இந்த கைதுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அந்த பெண்கள்  இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்
பால்தாக்கரேவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க கட்ஜூ மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஃபேஸ்புக் பெண் கைது: மகா. முதல்வருக்கு எச்சரிக்கை கடிதம்!"

Post a Comment