இந்திய நாட்டில் "முஸ்லிம்களாக வாழ்வதையே குற்றப்படுத்தும் கொடூர செயல்கள்" அதிகரித்து வருவது, கவலையளிப்பதாக உள்ளதுடன், இந்த பாரபட்சமான செயல்கள் எதிர்காலத்தில், கடும் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
கேரளத்தை சேர்ந்த அமீர் தாஹா (33) நேற்று முன்தினம் சென்னை வழியாக துபாய் செல்ல கொச்சியிலிருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மாலை 6 மணிக்கு வந்திறங்கினார்.
அந்த நேரத்தில் டெல்லி செல்ல விமான நிலையத்துக்கு வந்த மத்திய அமைச்சர் சிதம்பரத்தை, தனது செல்போனில் படம் பிடித்ததாக கூறி விமான நிலைய அதிகாரிகள், அமீர் தாஹாவை (முஸ்லிம் என்ற காரணத்தினால்) போலீசிடம் ஒப்படைத்தனர்.
ஒரு நாள் முழுவதும் "தனியறையில்" வைத்து சித்திரவதை செய்ததுடன், நேற்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் ஜெயிலில் அடைத்தனர்.
விசாரணையின்போது, தான் புகைப்படக்கலையில் ஆர்வமுடையவன் என்றும், ‘‘இந்தியாவில் முக்கிய தலைவர்களை நேரில் பார்த்தால் அவர்களை செல்போனில் புகைப்படம் எடுப்பது எனது வழக்கம்’’ என்று தெளிவாக சொன்னதையும் ஏற்காமல், 24 மணிநேர சட்டவிரோத கைது நடவடிக்கையை, சட்டபூர்வ நடவடிக்கையாக மாற்றும் விதமாக ஆலந்தூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி 15 நாள் காவலில் ஜெயிலில் அடைத்தனர்.
ஒரு சீக்கியர், திருவாளர் சிதம்பரத்திடம் "கேள்வி மேல் கேள்வி கேட்டு" சிதம்பரத்தின் மீது திட்டமிட்டு செருப்பு வீசிய சில மணி நேரத்திலேயே தான் மன்னித்து விட்டதாக கூறி, வழக்குப்பதிவு செய்யவேண்டாம் எனக்கூறிய சிதம்பரம், எதேச்சையாக படம் பிடித்த முஸ்லிம் விஷயத்தில் இதுவரை வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன்?
இலங்கை பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தா.பாண்டியன் "இளைஞர்கள் போர்க்குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.
இதுபோன்ற முஸ்லிம் விரோத செயல்களுக்கு முஸ்லிம் இளைஞர்கள், போர்க்குரல் கொடுத்தால் மட்டும் போதாது.
முஸ்லிம் இயக்கங்களும் போரிட்டால் தான், இந்த அவலங்கள் நீங்கும்.




0 comments: on "சிதம்பரத்தின் மீது "செருப்பு" வீசிய சீக்கியருக்கு மன்னிப்பு; தண்டனையோ படம் பிடித்த படம் பிடித்த முஸ்லிமுக்கு !"
Post a Comment