தலைப்புச் செய்தி

Sunday, July 1, 2012

நித்தியானந்தா-ரஞ்சிதா இணைந்த வீடியோ உண்மை: அமெரிக்க அறிக்கையில் தகவல்


சுவாமி நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா இணைந்த வீடியோ உண்மை என்றும் அதில் மேலும் இருபெண்கள் இருப்பதாகவும் அமெரிக்க தடயவியல் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வீடியோவை நித்தியானந்தாவின் உதவியாளர் லெனின் கருப்பன் தைரியமாக எடுத்து வெளியிட்டார்.


ஆனால் இது போலியானது என்றும் மார்பிங் முறையில் சித்தரிக்கப்பட்டதெனவும் சுவாமி நித்தியானந்தா தெரிவித்தார். இதன்காரணமாக இந்த வீடியோ அமெரிக்கா தடயவியல் துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


அவர்கள் இதை ஆய்வு செய்து அறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த அறிக்கையை இன்று லெனின் கருப்பன் சென்னையில் வெளியிட்டார்.


இதுகுறித்து லெனின் கருப்பன் கூறியதாவது, நித்தியானந்தா சொல்வது போல் இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது அல்ல. இந்த வீடியோ உண்மை என்று அமெரிக்க தடயவியல் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த வீடியோ பதிவில் நடிகை ரஞ்சிதாவுடன் இருபெண்கள் இருக்கின்றார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை கர்நாடக சிபிசிஐடி பொலிஸாரிடம் ஒப்படைக்க இருக்கின்றேன்.


தற்போதும் நித்தியானந்தா தரப்பிலிருந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டேயிருக்கிறது என்று கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "நித்தியானந்தா-ரஞ்சிதா இணைந்த வீடியோ உண்மை: அமெரிக்க அறிக்கையில் தகவல்"

Post a Comment