மரண தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பது நாட்டின் ஜனாதிபதிக்கு மகிழ்ச்சியான பணி அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். |
இதுகுறித்து கலாம் தான் எழுதிய டர்னிங் பாயிண்ட்ஸ் என்ற புத்தகத்தில் கூறியிருப்பதாவது: குற்றத்தின் தன்மை, குற்றத்தின் கடுமை, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் சமூக, பொருளாதார நிலைமை போன்றவற்றை ஒரு சாதாரண குடிமகனின் நிலையில் இருந்து பரிசீலிக்க வேண்டும் என நான் நினைத்தேன். விசாரணை நீதிமன்றத்தில் வழங்கப்படுகிற தூக்குத் தண்டனைகள் அனைத்தும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றங்களில் உறுதி செய்யப்பட்ட நிலையில், அதை ஜனாதிபதி உறுதி செய்வது என்பது மிகவும் கடினமான பணி ஆகும். ஜனாதிபதி மாளிகையில் பல ஆண்டுகளாக இப்படி ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இது, எந்தவொரு ஜனாதிபதியும் மகிழ்ச்சியுடன் முடிவு எடுக்கக்கூடிய பணி அல்ல. கடந்த 1990ம் ஆண்டு கொல்கத்தாவில் 14 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற தனஞ் சாட்டர்ஜிக்கு மரணதண்டனையை உறுதி செய்தேன். இவர், 2004ம் ஆண்டு ஓகஸ்டு 14ம் திகதி தூக்கிலிடப்பட்டார். மரண தண்டனையை எதிர்த்து போடப்படுகிற மேல் முறையீட்டு வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரிக்கிறபோது, தண்டிக்கப்படுகிற கைதியின் வாழ்வாதார நிலை, அவரது குடும்பத்தின் நிலை ஆகியவற்றை சட்ட அமலாக்க அதிகாரிகள் (பொலிஸ்) புத்திசாலித்தனமாக கண்டறிய உஷார்ப்படுத்த வேண்டும். இத்தகைய ஆய்வு, குற்றவாளி எந்த நோக்கத்தில் குற்றத்தை செய்தார் என்பதை தெளிவாக தெரிய வைத்து விடும். நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். இந்நிலையில், செயற்கையாக அல்லது உருவாக்கப்பட்ட ஒரு சாட்சியத்தின் அடிப்படையில் ஒரு உயிரை எடுப்பதற்கு எந்தவொரு மனித அமைப்போ அல்லது மனிதரோ தகுதியானவர்கள் என்று என்னால் உறுதியாக கருத இயலவில்லை. எல்லோரும் கடவுளின் பிள்ளைகள். இந்நிலையில், செயற்கையாக அல்லது உருவாக்கப்பட்ட ஒரு சாட்சியத்தின் அடிப்படையில் ஒரு உயிரை எடுப்பதற்கு எந்தவொரு மனித அமைப்போ அல்லது மனிதரோ தகுதியானவர்கள் என்று என்னால் உறுதியாக கருத இயலவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார். |
0 comments: on "கருணை மனுக்களின் மீது முடிவெடுப்பது மிகவும் கடினமானது: அப்துல் கலாம்"
Post a Comment