பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சிறப்பு மிகுந்த நாடுகளைக் கொண்டுள்ளது.
இவை சர்வதேச நிதியத்திற்குக் கூடுதல் நிதியைத்(IMF) தமது பங்களிப்பாக வழங்கத் தீர்மானித்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் பொருளாதார நெருக்கடி உருவாகாமல் தடுக்க முடியும் என்று பிரிக்ஸ் நம்புகின்றது.
கடந்த 2010ம் ஆண்டில் ஏற்றுக்கொண்ட அனைத்துச் சீர்திருத்தங்களையும் முழுமையாக நடைமுறைப்படுத்த இவை தமது பங்களிப்பைச் செலுத்த முன்வந்துள்ளன. மெக்ஸிகோவில் நடந்த G.20 மாநாட்டின் போது பிரிக்ஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
0 comments: on "சர்வதேச நிதியத்துக்குக் கூடுதல் நிதி(IMF) வழங்க பிரிக்ஸ் நாடுகள் தீர்மானம்"
Post a Comment