டைட்டானிக் என்ற பெயரில் மீண்டும் ஒரு கப்பலை அவுஸ்திரேலிய தொழிலதிபர் கிளைவ் பாமர் உருவாக்குகிறார்.
நூறு வருடங்களுக்கு முன்பு முதல் டைட்டானிக் கப்பல் கட்டி முடிக்கப்பட்ட போது அதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் கப்பல். இப்போது அதே வடிவத்தில் இரண்டாம் டைட்டானிக் கப்பலைக் கட்ட முடிவு செய்திருக்கிறார் கிளைவ் பாமர்.
9 அடுக்குகள், 840 அறைகளுடன் உள்ள இக்கப்பல் சீனாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்படும். பின்லாந்து நிறுவனமான டெல்டாமரீன் இதன் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும்.
நீருக்கு மேல் காணும் பகுதி முழுவதும் பழைய டைட்டானிக்கின் தோற்றத்தைப் போன்றே இருக்கும். நீருக்குள் இருக்கும் பகுதி மட்டும் நவீன கப்பல் செலுத்தும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற மாறுதல்களுடன் அமைக்கப்படும்.
2016ஆம் ஆண்டில் கப்பல் கட்டி முடிக்கப்பட்டதும் இங்கிலாந்துக்குச் செல்லும் போது சீன கடற்படை இதற்குத் துணையாக உடன் பயணம் செய்ய வேண்டும் என்று சீன அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் பாமர்.
இப்போதே இதில் பயணம் செய்வதற்காக 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் இங்கிலாந்து- அமெரிக்கா இடையே அட்லாண்டிக் சமுத்திரத்தில் வழக்கமான கப்பல் போக்குவரத்துப் பாதையில் இரண்டாம் டைட்டானிக் உல்லாசப் பயணிகளை தாங்கிச் செல்லும் என்றும் பாமர் கூறியுள்ளார்.
0 comments: on "மீண்டும் உருவாகிறது டைட்டானிக்"
Post a Comment