தலைப்புச் செய்தி

Monday, June 25, 2012

மீட்பு பணி மிகவும் மோசம்: சிறுமி மாகியின் தாய் கண்ணீர்


சிறுமி மாகியை மீட்பது மிகவும் தனக்கு அதிருப்தி அளித்ததாக தாயார் சோனியா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலம், குர்காவோனில் கடந்த புதன்(20.6.2012) இரவு ஆழ்துளை கிணற்றில் விழுந்தாள் சிறுமி மாகி.


இந்த தகவல் உடனடையாக மீட்புக்குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டாலும் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னரே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.


மறுநாள் காலை முதலே மீட்புபணிகள் தீவிரமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகலே சிறுமி மாகியை இறந்த நிலையில் மீட்புக்குழுவினர் மீட்டனர்.


இதுகுறித்து மாகியின் தாய், எனது குழந்தை மாகியை மீட்ட நடவடிக்கைகள் அதிருப்தி அளிப்பதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மீட்புகுழு தலைவர், பூமியை தோண்டும் போது பாறைகள் மிகவும் இடையூறாக இருந்தது. இதுபோன்ற நிலை யாருக்கும் ஏற்படக்கூடாது என்று தெரிவித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மீட்பு பணி மிகவும் மோசம்: சிறுமி மாகியின் தாய் கண்ணீர்"

Post a Comment