தலைப்புச் செய்தி

Wednesday, June 27, 2012

புத்தகம் படித்தால் கைதிகளின் தண்டனை குறைக்கப்படும்: பிரேசிலில் வினோதம்


பிரேசில் நாட்டில் அரசாங்கத்திற்கு சிறைக் கைதிகள் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளனர், இதை தடுக்க புதுவிதமான வழியை பின்பற்ற உள்ளனர்.
பிரேசிலில் உள்ள நான்கு சிறைகளிலும் மிக கடும் குற்றம் புரிந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர், எனவே புதிதாக வரும் கைதிகளை அடைக்க இடவசதி இல்லை.
எனவே இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட அரசாங்கம் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
இதன் படி, கைதிகளுக்கு 12 விதமான புத்தகம் படிக்கும் பணிகள் கொடுக்கப்படும். அதனை திறமையாக செய்து முடித்தால் தண்டனை காலம் குறைக்கப்படும்.
இலக்கியம், தத்துவயியல், அறிவியல் தொடர்பான புத்தகங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு புத்தகத்தையும் 4 நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்.
இதனை சரியாக செய்தால் 1 ஆண்டு தண்டனை காலத்தில் அதிகபட்சமாக 48 நாட்கள் குறைக்கப்படும். இதன் மூலம் கைதிகள் அறிவு, திறமையை வளர்த்துக் கொள்வதோடு விரைவில் விடுதலையும் செய்யப்படுவார்கள்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "புத்தகம் படித்தால் கைதிகளின் தண்டனை குறைக்கப்படும்: பிரேசிலில் வினோதம்"

Post a Comment