தலைப்புச் செய்தி

Saturday, June 30, 2012

சரணடையும் படி அளித்த நோட்டீசை ஏற்க விக்கிலீக்ஸ் நிறுவனர் மறுப்பு


ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் சரணடையும் படி பொலிசார் அளித்த நோட்டீசை ஏற்க மறுத்து விட்டார்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீது இரண்டு பெண்களை கற்பழித்தது தொடர்பாக ஸ்வீடன் அரச வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து அசாஞ்ச் பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். ஸ்வீடன் கோரிக்கைப்படி இவர் கைது செய்யப்பட்டார்.
அதன் பின் லண்டன் நீதிமன்றம் இவருக்கு ஜாமின் வழங்கியது. இதற்கிடையே தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி ஸ்வீடன் கோரியது.
இதை எதிர்த்து அசாஞ்ச் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அசாஞ்சை, ஸ்வீடனிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அசாஞ்ச் மேல் முறையீடு செய்தார். ஆனால் இவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து அசாஞ்சை கைது செய்து ஸ்வீடனிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டது. இதை தவிர்ப்பதற்காக அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டுத் தூதரகத்தில், கடந்த 20ஆம் திகதி தஞ்சம் புகுந்தார். தூதரகத்தை விட்டு வெளியேறும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார். நேற்று முன்தினம் வரை அவரை நாடு கடத்தக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த காலக்கெடு முடிந்ததால் அவரை நாடு கடத்த வேண்டிய பணியில் ஈடுபட்டுள்ள பொலிசார், ஈக்வடார் தூதரக அதிகாரிகளுக்கும், அசாஞ்சுக்கும் சரணடையக் கோரும் நோட்டீசை வினியோகித்தனர்.
ஆனால் இந்த நோட்டீசை வாங்க அசாஞ்ச் மறுத்து விட்டார். இதுகுறித்து பொலிசார், நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்ததால், அசாஞ்ச் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும். இதற்காக தான் அவருக்கு நாங்கள் நோட்டீஸ் வினியோகித்துள்ளோம் தெரிவித்துள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சரணடையும் படி அளித்த நோட்டீசை ஏற்க விக்கிலீக்ஸ் நிறுவனர் மறுப்பு"

Post a Comment