தமிழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளான பிஎஸ்சி (நர்சிங்), பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி(செவித்திறன் பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல் பட்டப்படிப்பு), பிஎஸ்சி (ரேடியோடயக்னோசிஸ்) டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி, பிஒடி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் இன்று (4ம் தேதி) முதல் விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி உட்பட 17 மையங்களில் விண்ணப்பம் வினியோகம் நடக்கிறது.
விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.350. விண்ணப்பம் பெற கடைசி நாள் 13ம் தேதி ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூன் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 comments: on "மருத்துவப் படிப்புகள்: இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம்!"
Post a Comment