அன்னா ஹசாரே குழுவினருக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும் என்று மத்திய அமைச்சர் சரத்பவார் சவால் விடுத்துள்ளார்.
மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வேளான் அமைச்சர் சரத் பவார், அன்னா ஹசாரே குழுவினர் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள். இந்த பிரச்சினையில் அவர்கள் என் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கலாம். மேலும் என் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரட்டும். நீதித் துறையில் நம்பிக்கை இருந்தால், அவர்கள் அதைச் செய்ய வேண்டும். கமிஷன் அமைத்து விசாரித்தால், அது தாமதமாகும். எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் என்று கூறினார்.
பிரதமர் போன்ற சிறந்த நபர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அன்னா ஹசாரே குழுவினர் கூறுவது துரதிருஷ்டவசமானது என்றும் சரத்பவார் தெரிவித்தார்.





0 comments: on "அன்னா ஹசாரேவுக்கு சரத்பவார் சவால்!"
Post a Comment